India Languages, asked by anjalin, 7 months ago

சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.

Answers

Answered by Anonymous
20

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

Answered by steffiaspinno
15

சார்க் உறுப்பு நாடுக‌ள்  

சா‌ர்‌க் அமை‌ப்பு

  • தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு (சா‌ர்‌க் அமை‌ப்பு) ஆனது தெ‌‌ற்கு ஆ‌சிய நாடுக‌ளி‌ன் பொருளாதார ஒ‌த்துழை‌ப்‌பி‌ற்காக துவ‌‌ங்க‌ப்ப‌ட்ட அமை‌ப்பு ஆகு‌ம்.
  • 1985 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 8 தே‌தி தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • சா‌ர்‌க் அமை‌ப்பு ஆனது உறு‌ப்பு நாடுக‌ளி‌ன் பொருளாதார சமூக, ப‌ண்பா‌ட்டு ஒ‌த்துழை‌ப்பு, வ‌ள‌ர்‌ச்‌சி‌க்காக ம‌ற்று‌ம்  ம‌ற்ற வளரு‌ம் நாடுகளுட‌ன் ந‌ட்புற‌வினை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ள தொட‌ங்க‌ப்ப‌ட்டது.  

சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்பு நாடுக‌ள்

  • சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்பு நாடுக‌ள் வ‌ங்காள தேச‌ம், பூட்டா‌ன், இ‌ந்தியா, மாலத்தீவு, நேபாள‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் ம‌ற்று‌ம் இல‌ங்கை முத‌லியன ஆகு‌ம்.
  • ‌பி‌ன்ன‌ர் 2007 ஆ‌ம் ஆ‌ண்டு ‌ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் நாடு உறு‌ப்பு நாடாக இணை‌ந்தது.  
Similar questions