வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
1
வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
வெளியுறவுக் கொள்கை
- ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை பாதுகாத்தல் முதலியன காரணங்களுக்கு உருவாக்கப்பட்ட கொள்கையே வெளியுறவுக் கொள்கை ஆகும்.
- நாட்டின் பாரம்பரிய மதிப்புகள், ஒட்டு மொத்த தேசியக் கொள்கை, எதிர் பார்ப்பு மற்றும் சுய கருத்து ஆகியவற்றின் நேரடி பிரதிபலிப்பாக வெளியுறவுக் கொள்கை உள்ளது.
வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
- உடன்படிக்கைகள், தூதுவர்களை நியமித்தல், நிர்வாக ஒப்பந்தங்கள், வெளி நாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் முதலியன வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
Similar questions