India Languages, asked by anjalin, 8 months ago

__________என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும். அ) உணவு கிடைப்பது ஆ) உணவுக்கான அணுகல் இ) உணவின் முழு ஈடுபாடு ஈ) இவை ஏதுமி‌ல்லை

Answers

Answered by Lakshith1211
1

Answer:

என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் [1]. உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசியமான சத்துகளை உணவு பெற்றுள்ளது. உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு அவ்வுயிரினத்தின் உடல் செல்களால் தன்வயமாக்கப்பட்டு, வளர்ச்சியடையவும் உயிர்வாழவும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

வரலாற்று ரீதியாக, மனிதர்கள் இரண்டு முறைகளில் உணவு சேகரித்துக் கொண்டனர்: வேட்டை மற்றும் விவசாயத்தின் மூலம் சேகரித்தல் என்பன அவ்விரு வகைகளாகும். உலகில் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்குத் தேவையான, இன்றியமையாத உணவின் பெரும்பகுதியை இன்று உணவுத் தொழில்கள் வழங்கி வருகின்றன. அனைத்துலக உணவு பாதுகாப்பு நிறுவனம், உலக வள மையம், உலக உணவு திட்டம் அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அனைத்துலக உணவு தகவல் கவுன்சில் போன்ற அனைத்துலக அமைப்புகள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் முதலியனவற்றை கண்காணிக்கின்றன. நிலைத்தன்மை, உயிரியற் பல்வகைமை, காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து பொருளாதாரம், மக்கள்தொகை வளர்ச்சி, நீர் வழங்கல் மற்றும் உணவுக்கான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவ்வமைப்புகள் விவாதித்து வருகின்றன.

உணவுக்கான உரிமை என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு மனித உரிமையாகும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான பசிதீர்க்க போதுமான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது.

Explanation:

Thanks, follow, 5 star, brainliest

Answered by steffiaspinno
0

உணவு கிடைப்பது

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுக‌ள்

உணவு கிடைத்தல்

  • விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு காண‌ப்படுவதே உணவு கிடைத்தல் ஆகு‌ம்.
  • உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடே உணவு கிடைத்தல் ஆகு‌ம்.  

உணவுக்கான அணுகல்

  • முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூறு உணவுக்கான அணுகல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வி உட‌ன் ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புக‌ள் தொட‌ர்பு உடையதாக உ‌ள்ளன.  

உணவினை உறிஞ்சுதல்

  • உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்த தேவையான  திறனு‌க்கு உணவினை உறிஞ்சுதல் எ‌ன்று பெய‌ர்.
  • உணவு மற்றும் சுகாதார நிலையை திறம்பட உயிரியல் ரீதியாக அனும‌தி‌க்கு‌ம் கார‌ணிகளாக ஊட்டச்சத்து, அறிவு, நடைமுறைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழல் நிலைகள் முத‌லியன உ‌ள்ளன.
Similar questions