பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி
Answers
ANSWER:
1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி (Green Revolution) எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. தொலைநோக்கில் இந்தப் பயிர்ச்செய்கையின் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்வது தேவையானாலும், பசுமைப் புரட்சி உலக சமூக தொழில்நுட்ப பொருளாதார அரசியல் தளங்களில் நிகழ்ந்த முக்கிய புரட்சிகளுள் ஒன்று என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூற்று[சான்று தேவை]. பசுமைப் புரட்சியானது "உயர்-மகசூல் வகைகளை" உருவாக்கியதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 1900 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஹெக்டேருக்கு 2.5 டன்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9.4 டன்களாக அதிகரித்தது. அதேபோன்று, உலகளாவிய சராசரி கோதுமை மகசூல் 1900 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 1 டன்னுக்கும் குறைவாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 2.5 டன்னுக்கும் அதிகமாக இருந்தது.
தென் அமெரிக்க சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 2 டன்னுக்கு குறைவாகவும், ஆப்பிரிக்காவில் ஹெக்டேருக்கு 1 டன்னுக்கு குறைவாகவும், எகிப்து மற்றும் அரேபியாவில் நீர்ப்பாசனத்தைக் கொண்டு ஹெக்டேருக்கு 3.5 முதல் 4 வரையிலுமாக இருந்தது. இதற்கு முரணாக, பிரான்ஸ் போன்ற நாடுகளின் சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 8 டன்னுக்கும் அதிகமாகஇருந்தது. மகசூலில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை, மரபணுக்கள், மற்றும் தீவிர விவசாய உத்திகள் (உரங்கள், ரசாயன பூச்சிக் கட்டுப்பாடு,தேக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டுப்பாடு) ஆகியவற்றால் ஏற்படுகின்றன.[1][2]
1921 ஆம் ஆண்டின் என்சைக்ளோபீடியாவிலுள்ள இந்தப் படம் ஆல்பால்பா நிலத்தை ஒரு டிராக்டர் உழுவதைக் காட்டுகிறது.
இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவிடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேரு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. Norman Borlaug பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். சாமிநாதன் இந்தியாவில் பசுமைப்புரட்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவர்களில் ஒருவர்.
Explanation:
SEARCH THIS WEBSITE... U WILL GET THE ANSWER...
*FOLLOW ME
பசுமைப் புரட்சி தோன்றியதன் காரணம்
- உணவு உற்பத்தி ஆனது இந்திய விடுதலைக்கு பிந்தைய காலத்தின் தொடக்கத்தில் மிகவும் மோசமானதாக இருந்தது.
- பல விவசாயிகளிடம் மிகக் குறைந்த அளவு நிலமே இருந்தது.
- அவர்கள் கடன் சுமையினால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தனர்.
- விவசாயிகளிடம் இருந்த சிறிய நிலங்களும் ஒரே இடத்தில் இல்லாமல் ஆங்காங்கே சிதறி இருந்தது.
- மேலும் போதிய பணம் இல்லாமையால் நவீன விவசாயக் கருவிகளை பற்றி அறிந்து இருந்தும் அதை வாங்க முடியவில்லை.
- விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நிலத்தின் உற்பத்தித் திறன் ஆனது மிகவும் குறைவாக இருந்தது.
- இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 70% மக்கள் விவசாயம் செய்தனர்.
- எனினும் பற்றாக்குறையின் காரணமாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவானது.
- இதன் விளைவாக பசுமைப் புரட்சி உருவானது.