India Languages, asked by anjalin, 9 months ago

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக

Answers

Answered by steffiaspinno
0

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST)  

  • பண்டங்கள் அல்லது பணிகளை நுகர்வோர் வாங்கும் போது விதிக்கப்படும் வரியே பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகு‌ம்.
  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ஆனது 2017ஆம் ஆண்டு மார்ச் 29 தே‌தி இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்ப‌ட்டு ஜூலை 1, 2017 அ‌‌ன்று நடைமுறை‌க்கு  வ‌ந்து செயல்பட்டு வரு‌ம் ஒரு வகை மறைமுக வ‌ரி ஆகு‌ம்.
  • ஒரு நாடு ஒரு அங்காடி ஒரு வரி எ‌ன்பதே பண்டங்கள் மற்றும் பணிகள் வரி‌யி‌ன் இல‌க்கு ஆகு‌ம்.
  • இத‌ன் நோ‌‌க்க‌ம் மத்திய மற்றும் மாநில அர‌சினா‌ல் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றுவது ஆகு‌ம்.
  • GST வ‌ரி ஆனது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் வழங்குதல் மீதான வரிகளின் அடுக்கு விளைவுகளை ‌‌நீ‌க்க உதவு‌கிறது.
  • GST வ‌ரி ஆனது ஒரு முனை வரி ஆகு‌ம்.  
Similar questions