தமிழ் நாட்டில் தொழில்மயமாதலின் வரலாறு பற்றி குறிப்பு வரைக.
Answers
Explanation:
தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் (ஆங்கிலம்: Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2013–14) இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களைப் போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரிப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் வரலாறு
விடுதலைக்கு முன்பு
- அதிக அளவு நெசவுத் தொழில் தோன்ற மேற்கு மற்றும் தெற்கு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி காரணமாக அமைந்தது.
- சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகில் தொழிற்சாலைகள் உருவாக வாணிப வளர்ச்சி காரணமாக அமைந்தது.
- திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் தோல் உற்பத்தி தொழிலானது நடைபெற்றது.
விடுதலைக்கு பின்பு (1990)
- மத்திய அரசு 1990களின் முற்பகுதியில் ரயில் பெட்டி தொழிற்சாலையினை சென்னையிலும், பாரத் கனரக மின்சார நிறுவனத்தினை திருச்சியிலும் நிறுவியது.
- ஜவுளி இயந்திரங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்ச பயன்படும் பம்ப் குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் முதலியன கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டது.
தாராளமயமாக்கப்பட்ட தொழில்மயமாதல்
- தொழில் முனைவோரை மலிவான நிலம், வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள் முதலிய சலுகைகள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்தின.