எழுத்துக்களின் பிறப்பு எத்தனை வகைப்படும்
Answers
Answered by
6
எழுத்துக்களின் பிறப்பு 2 வகைப்படும்
Step-by-step explanation:
1. இடப்பிறப்பு(காற்றறைகள்)
- மார்பு(வல்லினம்)
- கழுத்து(ஆயுதம்)
- தலை(உயிர்,இடையினம்)
- மூக்கு(மெல்லினம்)
2. முயற்சி பிறப்பு (ஒலிப்பு முனைகள்)
- இதழ் , நா, பல் ,அண்ணம்
- வல்லின எழுத்துக்கள் -கசடதபற
- மெல்லின எழுத்துக்கள் - ங ஞ ண ந ம ன
- இடையின எழுத்துக்கள் - ய ர ல வ ழ ள
முதலெழுத்துக்களின் இடப்பிறப்பு:
- வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பில் பிறக்கின்றன.
- மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூக்கில் பிறக்கின்றன.
- இடையின மற்றும் உயிர் எழுத்துக்கள் கழுத்தில் பிறக்கின்றது
- ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
- க், ங் - நாவின் முதற்பகுதி அண்ணத்தை தொடுவதினால்
- ச், ஞ் - நடு நா நடு அண்ணத்தை தொடுவதனால்
- ட், ண் - நாவின் நுனி அண்ணத்தின் நுனியைத் தொடுவதினால்
- த், ந் - மேல்வாய் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதனால்
- ப், ம் - மேல் உதடும், கீழ் உதடும் பொருந்தும் போது உண்டாதல்
- ய் - நாவின் அடிப்பகுதி மேல்வாயின் அடிப்பகுதியை பொருந்துவதனால்உண்டாதல்
- ர், ழ் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால்
- ல் - மேல்வாய் பல்லின் அடியை, நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதனால்
- ள் - மேல்வாயை நாவினது ஓரங்கள் தடித்து தடவுவதனால்
- வ் - மேல்வாய் பல்லை கீழுதடு பொருந்துவதனால்
- ற், ன் - மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால்
முதலெழுத்துக்களின் முயற்சி பிறப்பு:
- அ, ஆ - வாயைத் திறந்து ஒலிப்பதினால் உண்டாகிறது
- இ,ஈ, எ, ஏ, ஐ - வாயைத் திறப்பதோடு மேல் வாய்ப்பல்லை நா விளிம்பு தொடுவதனால் உண்டாகிறது
- உ, ஊ, ஒ, ஓ, ஔ - உதடுகளைக் குவித்து ஒலிப்பதினால்
__________________________________________________
- ஆவி - உயிர் எழுத்து அங்காப்பு - வாயை திறந்து ஒலித்தல் (திறத்தல்)
- மிடறு – கழுத்து உரம் - மார்பு
- ஆய்தமாகிய சார்பெழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது. இதன் முயற்சி பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தலே ஆகும்.பிறசார்பெழுத்துக்கள் யாவும்தத்தம் முதலெழுத்துக்கள் தோன்றுவதற்குரிய இடப்பிறப்பையும், முயற்சி பிறப்பையும் பெற்றுள்ளன.
Answered by
1
Answer:
ணபவதடவசளவபசலதஹாலிசலஙழதௌபஹ
Similar questions
Physics,
4 months ago
Science,
4 months ago
Sociology,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago