இடம்பெயர்தலுக்குக் காரணமான உந்து மற்றும் இழுவைக் காரணிகளை வேறுபடுத்து.
Answers
Answered by
1
Answer:
dear which language is this
Answered by
1
இடம்பெயர்தல்
- ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு மக்கள் இடம்பெயர்வது அல்லது குடிப்பெயர்வது இடம்பெயர்தல் எனப்படும்.
இடம்பெயர்தலுக்குக் காரணமான உந்து காரணி
- உந்து காரணி ஆனது ஒருவர் எந்த நாட்டில் இருந்து வெளியேறுகிறாரோ அந்த நாட்டோடு தொடர்பு உடையது ஆகும்.
- போதிய அளவு வேலையில்லாமை, பாலைவனமாக்கல், பஞ்சம்/வறட்சி, அரசியல் அச்சுறுத்தல், அடக்கு முறை, குறைந்த மருத்துவ வசதி, இயற்கை சீற்றங்கள் முதலியன இடம்பெயர்தலுக்குக் காரணமான உந்து காரணி ஆகும்.
இடம்பெயர்தலுக்குக் காரணமான இழுவை காரணி
- இழுவை காரணி ஆனது ஒருவர் எந்த நாட்டிற்கு இடம்பெயருகிறாரோ அந்த நாட்டோடு தொடர்பு உடையது ஆகும்.
- வேலைவாய்ப்புகள், சிறந்த வாழ்க்கை நிலை, அரசியல் மற்றும் மத சுதந்திரம், கல்வி, போதிய மருத்துவ வசதி, பாதுகாப்பு முதலியன இடம்பெயர்தலுக்குக் காரணமான இழுவை காரணி ஆகும்.
Similar questions