" கீழே கொடுக்கப்பட்டுள்ள அதீத மக்கள் தொகையினால் ஏற்படும் பிரச்சனைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் இரண்டு வாக்கியங்களில் எழுது. அ. இயற்கை வளங்கள் தீர்ந்துபோதல் ஆ. வாழிட இழப்பு அதிகரிப்பு இ. அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல்."
Answers
Answered by
0
அதீத மக்கள் தொகையினால் ஏற்படும் பிரச்சனைகள்
இயற்கை வளங்கள் தீர்ந்து போதல்
- அதீத மக்கள் தொகையினால் விளை நிலங்கள், பவளப்பாறைகள், நன்னீர், படிம எரிபொருள் மற்றும் காடுகள் முதலியன தீவிரமாக குறைந்து விடும்.
வாழிட இழப்பு அதிகரிப்பு
- அதீத மக்கள் தொகையினால் மழைக்காடுகள், பவளப்பாறைகள், நீர் வாழ் இடங்கள், புல்வெளிகள், விளை நிலங்கள் முதலியனவற்றின் இழப்பு ஏற்பட்டு அதை சார்ந்த உயிரினங்களின் இழப்பும் ஏற்படும்.
அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல்
- அதீத மக்கள் தொகையினால் நிலக்கரி, விறகு முதலியவற்றோடு பசுமை இல்ல வாயுவின் பயன்பாடும் அதிகரித்து உள்ளது.
- இது காற்றுடன் சேர்வதால் காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல், அமில மழை பொழிவு முதலியன ஏற்படுகிறது.
Similar questions