" சிதறிய குடியிருப்பு பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது அ) வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படும் ஆ) வயல் வெளிகளோடு கலந்திருக்கும் இ) சந்தை மற்றும் பிற செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கெடுப்பார்கள் ஈ) வளமான ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்படுகிறது"
Answers
Answered by
0
வளமான ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்படுகிறது
- வடிவங்களின் அடிப்படையில் கிராமக் குடியிருப்பு பகுதிகளை நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகள் மற்றும் சிதறிய குடியிருப்புகள் என இரு வகையாக பிரிக்கலாம்.
சிதறிய குடியிருப்புகள்
- சிதறிய குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டு காணப்படும்.
- மேலும் இவ்வகை குடியிருப்புகளில் உள்ள வீடுகள் வயல்வெளிகள் உடன் கலந்து காணப்படும்.
- எனினும் சந்தை, கோவில், முக்கிய இடம் முதலியன மையப்படுத்தப்பட்டு இருக்கும்.
- இதனால் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கேற்பர்.
நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகள்
- நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகளில் வீடுகள் அருகருகே அமைந்து இருக்கும்.
- (எ.கா) வளமை மிகுந்த சமவெளிப் பகுதிகள்.
Similar questions