தலம் மற்றும் சூழலமைவு – வேறுபடுத்துக.
Answers
Answer:
வீடு / மனை வாங்குதல் / ாம் நகரத்தின் உயரமான ஒரு இடத்தில் இருந்து இரவு நேரத்தில் அந்நகரத்தைப் பார்க்கும் பொழுது, அங்குள்ள வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தைக் காணலாம். இவ்வெளிச்சம் குடியிருப்பின் வடிவமைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. விளக்குகளின் வெளிச்சம் பரவலாக இருப்பின் அது பெரிய நகரமாக இருக்கும். வெளிச்சங்கள் பரவலாகத் தெரியாப் பகுதிகள் கிராமங்களாகவோ, திறந்த வெளிகளாகவோ அல்லது வயல்வெளிகளாகவோ அமையும். பொதுவாக இந்த விளக்குகளின் ஒளி ஏதோ ஒருவித அமைப்பைக் கொண்டதாகக் காணப்படும். இத்தகைய அமைப்பினை புவியியலார் முறைப்படுத்தியுள்ளனர். குடியிருப்பின் அமைப்புகள், செயல்பாட்டின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு குடியிருப்பின் வடிவமைப்பு, மலைகள், நீர்நிலைகள், சமவெளிகள், ஏனைய இயற்கைத் தோற்றங்களைச் சார்ந்து அமைகின்றது. உலகின் எல்லாப் பகுதிகளிலும், ஒரே மாதிரியான குடியிருப்புகளைக்காண இயலாது. அவைகள் இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. குடியிருப்புகள் மாறுபட்டு காணப்படுவதற்குப் பல காரணிகள் உள்ளன. இக்காரணிகளை ஆராய்வதற்கு முன்னர், குடியிருப்புகளின் தோற்றத்திற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
குடியிருப்பின் தோற்றம்
பழங்கால மனிதன் நாடோடியாகத் திரிந்திருந்த காலத்தில் நிலையாகத் தங்குவதற்கு சமயம், கலாச்சாரம், இராணுவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்றவைகள் காரணங்களாக அமைந்தன. இறந்தவர்களை புதைப்பதற்காகவும் அவர்களுக்குரிய சடங்குகளை மேற்கொள்வதற்காகவும், நிலையான ஒரிடத்தை ஏற்படுத்தினர். காலப்போக்கில், அவ்விடங்கள் சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களாயின. ஆண்கள் உணவிற்காக இடம் விட்டு இடம் பெயரும்பொழுது, பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளும் ஒரிடத்தில் நிலையாகத் தங்கி வீட்டிற்குத் தேவையானவைகளை உற்பத்தி செய்தனர். இவைகள் நாளடைவில் கலாச்சார முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புகளாக மாற்றமடைந்தன.
நிலையாகத் தங்க ஆரம்பித்த மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆகியவர்களைக் காக்க பாதுகாப்பான சுவர்களை அமைத்தனர். வீரர்களை நியமித்து அவர்களுக்கானக் குடியிருப்புகளையும் அமைத்தனர். எனவே, அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் முதலில் தோன்றலாயின.
குடியிருப்பில் நிலையாகத் தங்க ஆரம்பித்தவர்களுக்காகவும் மனிதர்கள் உணவினைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. எல்லாக் காலங்களிலும் தேவையான அளவு உணவு சேகரிக்க முடியவில்லை. எனவே உணவு கிடைக்கும் காலத்தில் அவற்றைச் சேகரித்து, சேமித்து வைக்க, சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய இடங்கள் நாளடைவில் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புகளாயின. பிறகு படிப்படியாக அனைவரும் நாடோடி வாழ்க்கையை விட்டு ஒரிடத்தில் நிலையாகத் தங்கத் துவங்கினர். இவ்வாறாகத்தான் நிரந்தரமான குடியிருப்புகள் தோன்றலாயின.
குடியிருப்பு
மனிதனின் வாழ்விடங்களே குடியிருப்புகள் என அழைக்கப்படுகின்றன. குடியிருப்புகள் ஒவ்வொன்றும் புவி மற்றும் இயற்கைச் சூழலின் மீது மனிதனின் ஆதிக்கத்தினை வெளிப்படுத்தும் முத்திரையாக விளங்குகின்றன. குடியிருப்புகள் அனைத்திற்கும் அமைவிடங்கள் உண்டு. அந்த அமைவிடத்தின் பண்புநலன்கள் குடியிருப்புக்கு ஒரு வடிவமைப்பைத் தருகின்றன.
தலமும் சூழலமைவும்
குடியிருப்பின் அமைவிடம் இரண்டு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவையாவன: தலம் மற்றும் சூழலமைவு.
தலமும், சூழலமைவும் கொண்ட குடியிருப்புகள் அமைப்பிலும் பண்பிலும் ஒன்றாகவே இருக்கின்றன. அமைவிடங்களின் பண்பையும், பரவலையும் தெரிந்துகொள்ள வகை செய்வது குடியிருப்புப் புவியியலின் நோக்கங்களில் ஒன்றாகும். மலைச்சரிவு, மலை உச்சி, குன்று, ஆற்றுப் பள்ளத்தாக்கு, ஆற்றுத் திடல், நீருற்று, குளம், சாலைகள் கூடுமிடம் மற்றும் சமய கட்டுமானங்கள் ஆகியவைகள் குடியிருப்புகள் அமைகின்ற முக்கியத் தலங்களாகும்.
தலம்
ஒரு குடியிருப்பு அமையும் இடம் தலம்’ எனப்படும். குடியிருப்புத் தலங்களின் சிறப்பையும் அவற்றின் வசதிகளையும் அறிந்து கொண்டால், அவைகள் அங்கு தோன்றியதற்கான காரணம் புரிந்து விடும். அக்காரணங்கள், குடியிருப்புகள் தோன்றுவதற்கு மட்டுமே உதவியாக இருக்கின்றன. வளர்ச்சியடைந்த பிறகு, அவை முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, நீர் கிடைப்பதால் ஒரு குடியிருப்பு ஒரு குளத்தைச் சுற்றி உருவாகலாம். ஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த ஒரு குளம், காலப்போக்கில் மக்கள்தொகை பெருக்கத்தினால் முக்கியத்துவத்தை இழந்துவிடலாம். இருப்பினும் அக்குடியிருப்புகள் இடம் பெயர்வதில்லை. ஆனால் புதிய நீர்நிலைகளை உருவாக்கிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, கிணறுகள், குளங்கள் எனப்புதிய நீர்நிலைகள் தோன்றக்கூடும்.
வணிகத்தலம்
வேளாண் தொழிலில் விளைநிலங்களுக்கு அருகிலேயே உற்பத்திப் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டன. இதனால், பண்ணைக் குடியிருப்புகள் விளைநிலங்களையே தலமாகக் கொண்டமைந்தன. பின்னர், இயந்திர விவசாயத்தினால் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த தானியத்தை விற்கவேண்டி வந்தது. எனவே, தானிய மூட்டைகள் பண்ணையிலிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு பல பண்ணைகளிலிருந்து உபரி தானியங்கள் ஒரு கிராமத்தில் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் முறையான வணிகம் நடைபெறும்போது, அக்கிராமம் ஒரு வணிகத் தலமாக மாறிவிடுகின்றது.
வணிகக் குடியிருப்புகளில் பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்காக போக்குவரத்துச் சாலைகள் தேவைப்பட்டன. இதனால் உபரி உற்பத்தி உள்ள பகுதிகளில் வணிகத்தைப் பணியாகக் கொண்ட பல குடியிருப்புகள் தோன்றலாயின. ஆற்றங்கரை ஒரங்களிலும் பெரிய சாலை ஓரங்களிலும், பல முக்கிய சாலைகள் கூடுமிடத்திலும், இருப்புப் பாதைகள் இணையுமிடத்திலும் வணிகத்தை ஆதாரமாகக் கொண்ட
ஒரு குடியிருப்பின் தலம்
- ஒரு குடியிருப்பின் தலம் ஆனது அந்த குடியிருப்பு அமைந்து உள்ள இடத்தின் இயற்கை அமைப்பினை விவரிக்கிறது.
- இங்கு மண்ணின் தரம், காலநிலை, இருப்பிடம், நீர் அளிப்பு, கட்டுமானப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு முதலிய காரணங்களை கருத்தில் கொண்ட குடியிருப்புகள் உருவாகின.
ஒரு குடியிருப்பின் சூழலமைப்பு
- ஒரு குடியிருப்பின் சூழலமைப்பு என்பது ஒரு குடியிருப்பு மற்ற குடியிருப்புகள் மற்றும் இயற்கை நிலத் தோற்றங்கள் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பினை விளக்குவது ஆகும்.
- ஒரு குடியிருப்பின் சூழலமைப்பு ஆனது ஒரு குடியிருப்பு சிறிய அல்லது பெரிய நகரமாக மாறுகிறதா அல்லது கிராமமாகவே இருக்கிறதா என்பதை முடிவு செய்யும் காரணி ஆகும்.