"கனிமங்களைப் பற்றிய உண்மையல்லாத வாக்கியத்தை அடையாளம் காண்க. (அ) கனிமங்கள், பொதுவாக தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் விரிசல்கள், பிளவுகள், வெடிப்புகள் மற்றும் இணைப்புகளில் காணப்படுகின்றன. (ஆ) பாறை இணைப்புகளில் காணப்படும் சிறிய அளவிலான கனிமங்கள் இழை(Vein) என அழைக்கப்படுகின்றன. (இ) பாறை இணைப்புகளில் காணப்படும் பெரிய அளவிலான கனிமங்கள் சுமை (Load) என அழைக்கப்படுகின்றன. (ஈ) சிதைவடைந்த பாறைத்துகள்கள் நீரால் அடித்துச் செல்லப்படும் பொழுது கரையக்கூடிய துகள்கள் அகற்றப்பட்டும் கரையாத துகள்களை விட்டுச்செல்லும் இவ்வகையில் தோன்றுவதைச் சிதைவடைந்த எஞ்சிய துகள்கள் என்று அழைக்கப்படுகின்றன"
Answers
புவி வேதியியல் (Geochemistry) என்பது புவியின் புவிப்படல ஓடு மற்றும் பெருங்கடல்கள் போன்ற பெரும் புவி சார்ந்த அமைப்புகளின் பின்னால் உள்ள நிகழ்வுகளின் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேதியியலின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அறிவியலாகும்.[1] புவிவேதியியலின் எல்லைகளானது புவிக்கப்பாலும், அதாவது சூாியக்குடும்பம் முழுவதையும் சூழ்ந்து விாிகிறது.[2] மேலும், புவி வேதியியலானது புவியடுக்குகளில் வெப்பச்சலனம், கோள்கள் உருவாக்கம், கருங்கல், எாிமலைப் பாறைகளின் உருவாக்கம் ஆகிய இயற்கைச் செயல்முறைகள் தொடர்பாகப் புரிதல் ஏற்பட முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது.
பொருளடக்கம்
1 வரலாறு
2 உட்களங்கள்
3 வேதியியல் தன்மை
4 வேதித்தனிமங்கள்
4.1 கனிமங்களின் இயைபு
4.2 பெல்சிக், இடைநிலை மற்றும் மாபிக் எரிமலைப் பாறைகள்
5 மேற்கோள்கள்
6 புற இணைப்புகள்
வரலாறு
1838 ஆம் ஆண்டில் சுவிசு-செர்மன் நாட்டின் வேதியிலாளா் கிறிஸ்டியன் ப்ரெட்ரிக் ஸ்கோபெய்ன் என்பவா் ’புவிவேதியியல்’ என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினாா். அவர் தனது அறிக்கையில் ஒரு புதிய அறிவியலின் உருவாக்கத்தைக் கணித்துப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தாா்.
“புவி வேதியியலானது நிலவியலாக உருவாவதற்கு முன்னதாக ஒப்பீட்டு புவிவேதியியல் என்பது உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முன்னதாக நமது கோள்களின் தோற்றம் மற்றும் அவற்றுள் புதைந்து கிடக்கும் கனிமப்பொருட்கள் பற்றிய புதிர்கள் தீர்க்கப்படவேண்டும்"[3]
ஸ்கோபெய்னின் தொடக்கப்பணிகளுக்குப் பிறகு சிறிது காலத்திற்குப் பின்னரே இந்தப் பொருள் தொடர்பான களமானது உணரப்பட்டது. ஆனாலும், புவிவேதியியல் என்ற சொல்லானது நிலவியலாளர்கள் மற்றும் வேதியியலாளா்கள் ஆகியோரால் எடுத்தாளப்படவில்லை. மேலும் இந்த இரு அறிவியலில் எது ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிாிவு என்ற விவாதங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன.[3] புவி வேதியியலில் நிலவியலாளா்கள் மற்றும் வேதியியலாளா்கள் உடனிணைந்து பணியாற்றும் நேர்வுகள் அரிதாக இருந்தன. மேலும் இந்த பங்களிப்பு மிகவும் குறைவானதாகவும், அங்கீகரிக்கப்படாததாகவும் இருந்தன.
இருபதாம் நுாற்றாண்டில் பிறந்த விக்டர் கோல்டுசுமித் என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்தவா். இவர் தனது தொழில்முறை வாழ்வில் பெரும்பகுதியை நார்வே மற்றும் செருமனியில் கழித்தவா். இவரது பணிகளே புவிவேதியியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். விக்டர் கோல்டுசுமித் “நவீன புவிவேதியியலின் தந்தை“ என அழைக்கப்படுகிறாா்.[4] 1920 கள் மற்றும் 1930 களில் வெளியிடப்பட்ட தொடர் வெளியீடுகளான Geochemische Verteilungsgesetze der Elemente (Geochemical Laws of the Distribution of Elements] மூலமாக கோல்டுசுமித் நவீனப் புவிவேதியியலை ஒரு புதிய துறையாக அங்கீகரிப்பதற்கான வலுவான அடித்தளத்தை உண்டாக்கினாா்.[5]
புவி வேதியியலின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு முக்கியமான ஆளுமை ப்ராங்க் விக்கில்ஸ்வொர்த் க்ளார்க் ஆவார். இவர் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் புவிக்குள் மிகுதியான அளவில் உள்ள பல்வேறு தனிமங்களையும், அவற்றின் அளவுகளுக்கும் அணுநிறைக்கும் உள்ள தொடர்புகளையும் குறித்து ஆய்வுகளைத் தொடங்கியிருந்தாா். எரிகற்கள் அல்லது விண்கற்கள் மற்றும் புவியடுக்குகளில் உள்ள பாறைகளில் பொதிந்துள்ளவற்றின் இயைபு மற்றும் அவற்றுக்கிடையேயான வேறுபாடு குறித்து 1850 ஆம் ஆண்டுகளிலேயே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 1901 ஆம் ஆண்டிலே் ஆலிவா். சி. பாரிங்டன் என்பாா் இவற்றுக்கிடையேயான வேறுபாடு இருந்தாலும் ஒப்பீட்டளவிலான மிகுதித்தன்மை முன்னா் கூறியவாறே இருப்பதாகத் தனது எடுகோளை எடுத்துக்கூறினாா்.[3] இவருடைய இந்தக்கூற்றே அண்ட வேதியியல் என்ற அறிவியலின் பிாிவிற்கானத் தொடக்கமாக இருந்தது. நாம் அறிந்துள்ள சூரியக்குடும்பம் மற்றும் புவியின் தோற்றம் தொடர்பான பல தகவல்கள் இவாின் பங்களிப்பே ஆகும்.[2]
உட்களங்கள்
புவி வேதியியலின் உட்கூறுகளில் சில கீழே தரப்பட்டுள்ளன.
ஓரிடத்தனிம புவிவேதியியல் புவி மற்றும் புவிப்பரப்பில் வேதித்தனிமங்கள் மற்றும் அவற்றின் ஓரிடத்தனிமங்களின் ஒப்பீட்டளவிலான மற்றும் தனித்த செறிவுகளைக் கண்டறிதலை உள்ளடக்கியது.
புவியின் வெவ்வேறு பகுதிகளில் (புவியோடு, மூடகம், நீா்க்கோளம்) உள்ள தனிமங்களின் நகர்வுகள் மற்றும் பரவல்களை ஆய்வு செய்தல் மற்றும் கனிமங்களின் நகா்வு மற்றும் பரவலின் அடிப்படையாக உள்ள இலக்கைக் கண்டறிதல்
அண்ட வேதியியல்அண்டத்தில் தனிமங்கள் மற்றும் அவற்றின் ஓரிடத்தனிமங்கள் (isotopes) பரவியுள்ள விதத்தைப் பற்றிய பகுப்பாய்வை உள்ளடக்கியது.
உயிாிய புவி வேதியியல் புவியின் வேதியியலில் உயிா்களின் வாழ்க்கை ஏற்படுத்தும் தாக்கத்தை நுணுகி ஆராயும் பிாிவு
கரிம புவி வேதியியல் உயிா் வாழ்கின்ற அல்லது ஏற்கெனவே வாழ்ந்த உயிரினங்களால் நடத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் பெறப்பட்ட சேர்மங்கள் பற்றிய ஆய்வை உள்ளடக்கியது
நீா்ம புவி வேதியியல் புவியின் நீர்ப்பரப்பில் உள்ள பல்வேறு தனிமங்கள் (தாமிரம், கந்தகம், பாதரசம் போன்றவை) மற்றும் தனிம இளக்கிககள் எவ்வாறு வளிமண்டலம்-நிலப்பரப்பு-நீர்ப்பரப்பு இவற்றுக்கிடையே இடைவினைகளின் மூலமாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்பதைப் பற்றிய ஆய்வு அறிவியல்
மண்டல, சுற்றுச்சூழல் சார்ந்த, கண்டறிதல் சார்ந்த புவி வேதியியல் சுற்றுச்சூழல், நீரியல், கனிம கண்டுபிடிப்புகள் சார்ந்த பயன்பாடுகளைப் பற்றிய பிாிவு
ஒளி புவி வேதியியல் புவியின் மேற்பரப்பில் உள்ள இயற்கை பகுதிப்பொருட்களுக்கிஐடயே ஒளியால் துாண்டப்பெற்று நடைபெறும் வேதி வினைகளைப் பற்
பாறை இணைப்புகளில் காணப்படும் பெரிய அளவிலான கனிமங்கள் சுமை (Load) என அழைக்கப்படுகின்றன.
கனிமங்கள்
- கனிமங்கள் பொதுவாக தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் விரிசல்கள், பிளவுகள்,வெடிப்புகள் மற்றும் இணைப்புகளில் காணப்படுகின்றன.
இழை
- பாறை இணைப்புகளில் காணப்படும் சிறிய அளவிலான அல்லது மெல்லிய கனிமங்கள் இழை (Vein) என அழைக்கப்படுகின்றன.
லோட்ஸ்
- பாறை இணைப்புகளில் காணப்படும் பெரிய அளவிலான கனிமங்கள் லோட்ஸ் (Loads) என அழைக்கப்படுகின்றன.
சிதைவடைந்த எஞ்சிய துகள்கள்
- சிதைவடைந்த பாறைத் துகள்கள் நீரால் அடித்துச் செல்லப்படும் பொழுது கரையக்கூடிய துகள்கள் அகற்றப்பட்டும் கரையாத துகள்களை விட்டுச் செல்லும் இவ்வகையில் தோன்றுவதைச் சிதைவடைந்த எஞ்சிய துகள்கள் என்று அழைக்கப்படுகின்றன.