கனிம வளங்களை பாதுகாக்கும் வழி முறைகளை பட்டியலிடுக
Answers
Answered by
0
Explanation:
What is yur question i can't understand....
Answered by
0
கனிம வளங்களை பாதுகாக்கும் வழிகள்
கனிமங்கள்
- கனிமம் என்பது ஒரு வரையறை செய்யப்பட்ட வேதியியல் கலவையாக ஒரே விதமாக இயற்கையில் காணப்படும் ஒரு பொருளே ஆகும்.
- புவியில் மிகவும் மதிப்பு வாய்ந்த வளங்களில் ஒன்று கனிமம் ஆகும்.
கனிம வளங்களை பாதுகாக்கும் வழிகள்
- மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் கனிமங்களின் தேவையைக் குறைத்தல் வேண்டும்.
- கனிம வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்.
- கனிம வளங்களை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துதல் வேண்டும்.
- அத்தியாவசியமற்ற வளங்களைப் பயன்படுத்துவதையும், ஏற்றுக் கொள்வதையும் தவிர்த்தல் வேண்டும்.
- புதுப்பிக்க இயலாத வளங்களுக்கு மாறாக புதுப்பிக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
- பல்வேறு தயாரிப்புகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்தல் வேண்டும்.
Similar questions