"தவறாக பொருந்தியுள்ளதைக் கண்டறிக. அ) கனரக தொழிற்சாலை – இரும்பு எஃகு தொழிற்சாலை ஆ) இலகு ரக தொழிற்சாலை – தையல் இயந்திர தொழிற்சாலை இ) தனியார் தொழிற்சாலை – பிலாய் எஃகு தொழிற்சாலை ஈ) பொதுத்துறை தொழிற்சாலை – பாரத் கனரக மின்சாதன நிறுவனம்"
Answers
Answered by
0
Answer:
plz write in English ...
Answered by
0
தனியார் தொழிற்சாலை – பிலாய் எஃகு தொழிற்சாலை
கனரக தொழிற்சாலை
- அதிக எடை மற்றும் அதிக அளவிலான மூலப்பொருட்களை கொண்டு பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உடையவை கனரக அல்லது பெரிய அளவு தொழிற்சாலை ஆகும்.
- (எ.கா) இரும்பு எஃகு தொழிற்சாலை
இலகு ரக தொழிற்சாலை
- எடை குறைவான மூலப்பொருட்களை கொண்ட எடை குறைவான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இலகு ரக தொழிற்சாலை ஆகும்.
- (எ.கா) தையல் இயந்திர தொழிற்சாலை
தனியார் துறை தொழிற்சாலைகள்
- பஜாஜ் ஆட்டோ, டிஸ்கோ முதலியன தனியார் துறை தொழிற்சாலைகள் ஆகும்.
பொதுத்துறை தொழிற்சாலை
- பிலாய் இரும்பு உருக்காலை, துர்க்காபூர் இரும்பு உருக்காலை, பாரத் கனரக மின்சாதன நிறுவனம் முதலியன பொதுத்துறை தொழிற்சாலை ஆகும்.
Similar questions
Math,
6 months ago
Science,
6 months ago
Social Sciences,
1 year ago
Environmental Sciences,
1 year ago