"கீழ்க்கண்ட இடங்களில் வாழும் ஏதேனும் இரண்டு பழங்குடியினரின் பெயரை குறிப்பிடுக. பூமத்திய ரேகை காட்டுப்பகுதி: புல்வெளிகள்: வெப்பமண்டல பாலைவனங்கள்: மலைப் பிரதேசங்கள"
Answers
Answered by
0
பழங்குடியின மக்கள்
- பழங்குடியின மக்கள் சமூக முன்னேற்றத்தினை பொறுத்த வரையில் பொதுவாக கற்கால மனிதர்களை போலவே உள்ளனர்.
- இவர் நிலம் மற்றும் இயற்கை சூழலுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக உள்ளனர்.
- பூமத்திய ரேகை காட்டுப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் பிரிவுகள் பிக்மீக்கள், செமாங், சகாய், போரோ, பாப்புவான் முதலியன ஆகும்.
- புல்வெளி பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் பிரிவுகள் மசாய், கிர்கிஸ் முதலியன ஆகும்.
- வெப்ப மண்டல பாலைவனப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் பிரிவுகள் பெடோயின், புஷ்மேன், அபாரிஜின்ஸ் முதலியன ஆகும்.
- மலைப் பிரதேசப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் பிரிவுகள் பூட்டியா, குஜ்ஜார், நாகா முதலியன ஆகும்.
Similar questions