கூட்ட நெரிசலின்போது பின்பற்ற வேண்டிய செயல்விதிகளை விளக்கு.
Answers
Answered by
0
கூட்ட நெரிசலின்போது பின்பற்ற வேண்டிய செயல்விதிகள்
வெளியேற மாற்று வழியினைக் கண்டறிதல்
- கூட்ட நெரிசலின் போது வெளியேறும் வழியினை கண்டறிதல் அவசியம் ஆனது ஆகும்.
- நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அந்த இடத்தின் தன்மையினை அறிந்து கொள்ளல் வேண்டும்.
கைகளை மார்போடு வைத்து கொள்ளுதல்
- கைகளை மார்போடு வைத்து கொள்ளுவதன் மூலம் கூட்டத்தின் போது உங்கள் விலா எலும்புகள் நெருங்குவதை தவிர்க்கலாம்.
கீழே விழுந்தால் எவ்வாறு நகர்வது
- கூட்ட நெரிசலில் கீழே விழுந்தால் கைகளால் உங்கள் தலையினை மறைத்து கொண்டு கருவில் இருக்கும் குழந்தையை போல் உடலை வளைக்க வேண்டும்.
- மேலும் சந்திக்கும் இடத்தினை முடிவு செய்தல், சைகைகள் மூலம் புத்திசாலிதனமாக நடத்தல் முதலியனவற்றில் ஈடுபடலாம்.
Similar questions