கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.
Answers
கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா (Myopia) கண் வில்லையின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படுகிறது. உட் செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடையும் போது, ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகிறது. இதனால் பிம்பம் தெளிவற்றதாக உணரப்படுகிறது. இந்நிலை கிட்டப்பார்வை எனப்படும், ஏனெனில் தூரத்தில் உள்ள பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்பட இயலவில்லை. இந்நிலையைக் குழி வில்லைகளின் மூலம் சரி செய்யலாம். எவ்வாறு எனில் குழி வில்லையின் புறப்பகுதியின் வழியாக உள் செல்லும் ஒளிக்கதிர்கள் சற்றே விலக்கப்படுவதால் ஒளிச்சிதறலடைதலும் மாறுபாடு அடைகிறது. இம்மாற்றத்தினால் கிட்டப்பார்வை நிலையுடைய கண்ணில் ஒளி சரியான முறையில் விழித்திரையில் குவிக்கப்படுகிறது.
கிட்டப்பார்வை குறைபாடு
- விழி லென்சு மற்றும் விழித் திரை இடையேயான தொலைவு அதிகரிப்பு, விழி லென்சின் குவிய தூரம் குறைவு மற்றும் விழி கோளம் சிறிது நீண்டு விடுவதன் காரணமாக கிட்டப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
- கிட்டப் பார்வை குறைபாடு உள்ளவர்களால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க இயலும்.
- ஆனால் தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க இயலாது.
- குழி லென்சைப் பயன்படுத்தி கிட்டப் பார்வைக் குறைப்பாட்டைச் சரி செய்யலாம்.
தூரப்பார்வை குறைபாடு
- விழி லென்சு மற்றும் விழித் திரை இடையேயான தொலைவு குறைவு, விழி லென்சின் குவிய தூரம் அதிகரிப்பு மற்றும் விழி கோளம் சிறிது சுருங்கி விடுவதன் காரணமாக தூரப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
- தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களால் தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க இயலும்.
- ஆனால் அருகில் உள்ள பொருட்களை பார்க்க இயலாது.
- குவி லென்சைப் பயன்படுத்தி தூரப் பார்வைக் குறைப்பாட்டைச் சரி செய்யலாம்.