"கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக. அணுக்கரு உலை, கதிரியக்கம், செயற்கைக் கதிரியக்கம், ரேடியம் கண்டுபிடிப்பு "
Answers
Answered by
0
Answer:
plz write in English......
Answered by
0
வரிசைப்படுத்துதல்
கதிரியக்கம்
- 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்ரோல் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் யுரேனியம் ஒளிப்படத் தகட்டினை பாதிக்கும் அளவிற்கு சில கதிர்களை வெளியிடுவதை கண்டுபிடித்தார்.
- இந்த நிகழ்விற்கு கதிரியக்கம் என்று பெயர்.
ரேடியம் கண்டுபிடிப்பு
- 1898 ஆம் ஆண்டு போலந்து நாட்டு இயற்பியலாளர்கள் மேரி கியூரி மற்றும் அவரின் கணவர் பியூரி கியூரி ஆகியோர் பிட்ச் பிளண்ட் என்ற சிறிய கருமை நிற கதிரியக்க தாதுவில் இருந்து ரேடியம் என்ற கதிரியக்கத்தினை வெளியிடும் பொருளினை கண்டுபிடித்தனர்.
செயற்கைக் கதிரியக்கம்
- 1934 ஆம் ஆண்டு ஐரின் கியூரி மற்றும் F. ஜோலியட் ஆகியோர் செயற்கைக் கதிரியக்கத்தினை கண்டறிந்தனர்.
அணுக்கரு உலை
- 1942 ஆம் ஆண்டு உலகின் முதல் அணுக்கரு உலை அமெரிக்காவின் சிகாகோ நகரில் கட்டப்பட்டது.
Similar questions