இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
Answers
Answered by
2
இயற்கை கதிரியக்கத்தின் பண்புகள்
- புறத்தூண்டல் இல்லாமல் சில தனிமங்கள் தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடும் நிகழ்வு இயற்கைக் கதிரியக்கம் என அழைக்கப்படுகிறது.
- அணு எண் 83ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் இயற்கை கதிரியக்கத்தில் ஈடுபடுகின்றன.
- இயற்கை கதிரியக்கத்தினை கட்டுப்படுத்த இயலாது.
- இயற்கை கதிரியக்கத்தில் ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்கள் வெளியிடப்படுகின்றன.
செயற்கை கதிரியக்கத்தின் பண்புகள்
- சில இலேசான தனிமங்களை செயற்கை அல்லது தூண்டப்பட்ட முறையில் கதிரியக்கத் தன்மை உடைய தனிமங்களாக மாற்றப்படுகிறது.
- இந்த நிகழ்விற்கு செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர்.
- அணு எண் 83ஐ விட குறைவாக உள்ள தனிமங்கள் செயற்கை கதிரியக்கத்தில் ஈடுபடுகின்றன.
- செயற்கை கதிரியக்கத்தினை கட்டுப்படுத்த இயலும்.
- செயற்கை கதிரியக்கத்தில் நியூட்ரான், பாசிட்ரான் முதலிய துகள்கள் வெளியிடப்படுகின்றன.
Similar questions