ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் __________ ஆகும்.
Answers
Answered by
0
அணுக்கட்டு எண்
மூலக்கூறு
- மூலக்கூறு ஆனது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் அடிப்படைத் துகள் ஆகும்.
- மூலக்கூறு என்பது ஒரே தனிமத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களோ அல்லது மாறுபட்ட பல தனிமங்களின் அணுக்களோ வேதிப் பிணைப்பின் காரணமாக ஒன்றாக இணைந்து உருவாகும் சிறிய அடிப்படை துகள் ஆகும்.
- மூலக்கூறு ஆனது தனிமம் அல்லது சேர்மம் ஆகிய இரண்டில் எதுவாகவும் இருக்கலாம்.
- ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அந்த மூலக்கூறின் அணுக்கட்டு எண் ஆகும்.
- எடுத்துக்காட்டாக ஆக்சிஜன் மூலக்கூறு ஆனது இரண்டு ஆக்சிஜன் அணுவினை கொண்டு உள்ளதால் ஆக்சிஜன் மூலக்கூறின் அணுக்கட்டு எண் 2 ஆகும்.
Similar questions