கனஅளவு சதவீதம் - வரையறு.
Answers
Answered by
0
Explanation:
கன அளவு (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது கனவளவு அல்லது கொள்ளளவு (volume) என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். அனைத்துலக முறை அலகுகளில் கனவளவின் அலகு கன மீட்டர் ஆகும்.
திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை.
நன்றி
Answered by
0
கனஅளவு சதவீதம்
- ஒரு கரைசலில் உள்ள கரை பொருளின் கனஅளவினை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு சதவீதம் என அழைக்கப்படுகிறது.
- கன அளவு சதவீதம் ஆனது திரவக் கரைபொருள் மற்றும் திரவக் கரைப்பானைக் கொண்ட கரைசல்களின் செறிவைக் கணக்கிட உதவுகிறது.
- (எ.கா) 10% கனஅளவு எத்தனால் நீர்க்கரைசல் என்பது 10 மி.லி எத்தனாலை 90 மி.லி நீரில் கரைத்து பெறப்படும் கரைசலை குறிக்கிறது.
- கனஅளவு சதவீதம் என்பது v/v என குறிக்கப்படுகிறது.
- கனஅளவு சதவீதம் = கரைபொருளின் கனஅளவு / கரைசலின் கனஅளவு × 100.
- கனஅளவு சதவீதம் = கரைபொருளின் கனஅளவு / (கரைபொருளின் கனஅளவு + கரைப்பானின் கனஅளவு) × 100.
Similar questions
Accountancy,
4 months ago
Social Sciences,
4 months ago
Biology,
4 months ago
Biology,
8 months ago
Science,
8 months ago
Social Sciences,
11 months ago
English,
11 months ago
Math,
11 months ago