சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் காணப்படும் வாஸ்குலார் கற்றை ____________
Answers
Answered by
0
Answer:
sorry but i don't this language
Explanation:
pls mark me as a brainliest
Answered by
0
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
- சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படும் வாஸ்குலார் கற்றை ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை ஆகும்.
- இது இரு வகைப்படும்.
ஒருங்கமைந்தவை
- இந்த வகை வாஸ்குலார் கற்றையில் மையப்பகுதியினை நோக்கி சைலமும், வெளிப்புறத்தினை நோக்கி புளோயமும் அமைந்து உள்ளது.
- திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.
- (எ.கா) இரு வித்திலைத் தாவர தண்டு.
- சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படவில்லை என்றால் அது மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) ஒரு வித்திலைத் தாவர தண்டு.
இருபக்க ஒருங்கமைந்தவை
- வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் புளோயம் காணப்படும் வாஸ்குலார் கற்றை இருபக்க ஒருங்கமைந்தவை ஆகும்.
- (எ.கா) குகர்பிட்டா
Similar questions