ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
Answers
Answered by
4
கார்பன் டை ஆக்சைடு வாயு
ஒளிச் சேர்க்கை
- ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட சில பாக்டீரியங்கள் முதலிய தற்சார்பு ஊட்ட உயிரினங்கள் தமக்கு தேவையான உணவினை சூரிய ஒளியினை பயன்படுத்தி தாமே தயாரித்து கொள்ளும் நிகழ்விற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
- ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவிலிருந்து பெறப்படுகிறது.
- சூரிய ஒளியின் முன்னிலையில், கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரின் உதவியுடன் தாவரங்களின் இலைகளில் உள்ள பச்சையத்தில் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
- இதன் விளைவாக கார்போ ஹைட்ரேட் (குளுக்கோஸ்) உருவாக்கப்பட்டு ஸ்டார்ச்சாக மாற்றப்படுகிறது.
- இந்த நிகழ்வில் நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஆக்சிஜன் வாயு உருவாக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
- →
Similar questions