"பசுங்கணிகத்தின் எந்த பகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?"
Answers
Answered by
3
ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறும் பசுங்கணிக பகுதிகள்
ஒளிச் சேர்க்கை (photo synthesis)
- ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியினை பயன்படுத்தி தற்சார்பு ஊட்ட உயிரினங்கள் (ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட சில பாக்டீரியங்கள் முதலியன) தமக்கு தேவையான உணவினை தாமே தயாரித்து கொள்ளும் நிகழ்வு ஆகும்.
- ஒளிச்சேர்க்கையின் போது பசுங்கணிகத்தின் கிரானாவில் ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினையும், பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் ஒளி சாரா வினை அல்லது இருள் வினையும் நடைபெறுகிறது.
- ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினையினால் ATP மற்றும் NADPH2 உற்பத்தியாகிறது.
- இதனை கொண்டே இருள் வினையில் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
- இது கால்வின் சுழற்சி என அழைக்கப்படுகிறது.
Similar questions