அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது
Answers
Answered by
1
அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளையப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் (haemophagic parasite) செயல்படுகின்றன.
Answered by
1
அட்டையின் சுவாச மண்டலம்
- ஹிருடினேரியா கிரானுலோசா என்ற உயிரியல் பெயரினை உடைய இந்தியக் கால்நடை அட்டையில் சுவாசம் தோலின் வழியே நடைபெறுகிறது.
- மெல்லிய இரத்தக் குழல் தந்துகிகளைக் கொண்ட நெருக்கமான வலையமைப்பு அட்டையின் புறத்தோல் செல்களுக்கு இடையே காணப்படுகிறது.
- மெல்லிய இரத்தக் குழல் தந்துகிகளுக்குள் இரத்த உடற்குழி திரவம் காணப்படுகிறது.
- பரவல் முறையின் மூலம் சுவாச வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
- தோலின் வழியாக நீரில் கரைந்து உள்ள ஆக்சிஜன் இரத்த உடற்குழி திரவத்திற்குள் பரவுகிறது.
- தோலின் வழியாகவே கார்பன் டை ஆக்சைடு உடலுக்கு வெளியே பரவுகிறது.
- அட்டையின் தோல் ஈரமாக மற்றும் வழவழப்பாக இருக்க காரணம் கோழை சுரப்பு ஆகும்.
- இந்த கோழை சுரப்பு ஆனது உடல் உலர்ந்து போகாமல் பாதுகாக்கிறது.
Similar questions