இயல்பான இரத்த அழுத்தம் ___________
Answers
Answered by
0
120mmHg / 80mmHg
இரத்த அழுத்தம்
- இரத்த அழுத்தம் என்பது தமனியின் வழியே இரத்தம் ஓடும்போது, அதன் பக்கவாட்டுச் சுவர் மீது இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் ஆகும்.
- இரத்த அழுத்தம் ஆனது பொதுவாக சிஸ்டோலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் எனக் குறிப்பிடப்படுகிறது.
சிஸ்டோலிக் அழுத்தம்
- இடது வெண்ட்ரிக்கிள் ஆனது வென்ட்ரிகுலார் சிஸ்டோலின் போது சுருங்குகிறது.
- இதனால் இரத்தம் பெருந்தமனிக்குள் மிக வேகமாக செலுத்தப்படுகிறது.
- இந்த நிகழ்வின்போது ஏற்படும் மிகை அழுத்தத்திற்கு சிஸ்டோலிக் அழுத்தம் என்று பெயர்.
டயஸ்டோலிக் அழுத்தம்
- டயஸ்டோலின் போது இடது வென்ட்ரிக்கிள்கள் விரிவடைதால் அழுத்தம் குறைகிறது.
- இந்த குறைந்த அழுத்தத்திற்கு டயஸ்டோலிக் அழுத்தம் என்று பெயர்.
- ஓய்வு நிலையில் உள்ள ஆரோக்கியமான மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் 120mmHg / 80mmHg ஆகும்.
Similar questions