இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?
Answers
Answered by
0
கரோனரி தமனி
- இதயத்தின் வலது வெண்ட்ரிக்கிள் அறையில் இருந்து உருவான நுரையீரல் பொதுத் தமனி ஆனது வலது நுரையீரல் தமனி மற்றும் இடது நுரையீரல் தமனி என இரண்டாக பிரிகிறது.
- வலது நுரையீரல் தமனி ஆனது வலது நுரையீரலுக்கு ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்கிறது.
- அது போலவே இடது நுரையீரலுக்கு ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை எடுத்து செல்லும் பணியில் இடது நுரையீரல் தமனி ஈடுபடுகிறது.
- வலது வெண்ட்ரிக்கிளைவிட அளவில் பெரியதாக, சிறிது குறுகலாக உள்ளவை இடது வெண்ட்ரிக்கிள் ஆகும்.
- பெருந்தமனி இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து தோன்றுகிறது.
- பெருந்தமனி ஆனது ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றன.
- கரோனரி தமனிகள் இதயத் தசைகளுக்கு இரத்தத்தினை அளிக்கின்றன.
Similar questions