இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
Answers
Answered by
2
இதய ஒலிகள்
- இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் உண்டாகும் ஒலியே இதய ஒலி என அழைக்கப்படுகிறது.
- இதய ஒலி ஆனது லப் டப் என்ற இரு வகை ஒலியாக உருவாகிறது.
இதய ஒலிகள் உருவாகும் விதம்
- முதல் ஒலியான லப் என்ற ஒலி வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது (வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் தொடக்கம்) மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் உருவாகிறது.
- நீண்ட நேரத்திற்கு ஒலிப்பதாக லப் ஒலிகள் உள்ளன.
- வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச் சந்திர வால்வுகள் மூடிக் கொள்வதால் இரண்டாவது ஒலியான டப் என்ற ஒலி உண்டாகிறது.
- டப் என்ற ஒலியானது சற்று குறுகிய காலமே ஒலிக்கக் கூடியவை ஆகும்.
Similar questions