பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது ?
Answers
Answered by
2
please ask in english or in hindi
Answered by
0
கருவுதலில் இரு ஆண் கேமீட் எடுத்துச் செல்லப்படுவதன் காரணம்
- உடல செல்லினுள் பெரிய உட்கரு உள்ளது.
- உற்பத்தி செல்லானது மைட்டாசிஸ் மூலம் பிரிதல் அடைந்து இரு ஆண் பாலினச் செல்களை (கேமீட்டுகள்) உருவாக்குகின்றன.
- பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது.
- இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது.
- இதில ஒரு ஆண் கேமீட் அண்டத்துடன் இணைந்து சின்கேமி என்னும் இரட்டைமய சைகோட்டையினைத் தோற்றுவிக்கிறது.
- மற்றொரு ஆண் கேமீட் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மைக் கருவூண் உட்கருவினை உருவாக்குகிறது.
- இது மும்மய உட்கரு என அழைக்கப்படுகிறது.
- மூவிணைவிற்கு பிறகு முதன்மைக் கருவூண் உட்கரு ஆனது கருவூணாக மாறுகிறது.
- கருவூண் ஆனது உருவாகும் கருவிற்கு ஊட்டம் அளிக்கிறது.
- இதன் காரணமாகவே கருவுறுதலின் போது மகரந்தக்குழாய் இரு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது.
Similar questions