India Languages, asked by anjalin, 9 months ago

சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான். தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?

Answers

Answered by shobhikarastogi14
0

Explanation:

ஒரே வியர்வை நாற்றம்...!’

- ‘உன்கிட்டே கப் அடிக்குது...!’

- ‘நீ குளிச்சியா இல்லையா...!’ என்பது போன்ற நண்பர்களின் கிண்டலும்..

- ‘ஏங்க...! எப்பவும் உங்க மேல வியர்வை வாடை வீசுது!... ஏதாவது டாக்டரை போய் பாருங்கள்..!’ என்பது போன்ற மனைவியின் ஆதங்கமும் பல இடங்களில் ஒலிக்கிறது.

இந்த வியர்வை, நட்பு மற்றும் உறவு வட்டத்தை பிரித்து மனத்தாங்கலை ஏற்படுத்துவது சமூக நிகழ்வுகளில் சாதாரணமானது.

நமது உடலில் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் இயங்குகின்றன. ஒன்று, உடல் முழுவதும் இருக்கும் வியர்வை சுரப்பிகள். அது வியர்வை மட்டும் சுரக்கும். மற்றொன்று தலை, அக்குள், மர்ம உறுப்புகள் போன்ற இடங்களில் மட்டும் சுரக்கும். இந்த வியர்வை சுரப்பிகள், எண்ணெய் சுரப்பிகளுடன் சேர்ந்து மயிர்கால் வழியாக வியர்வையை சுரக்கும்.

நம் உடலில் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள வியர்வை பணியாற்றுகிறது. மேலும் உடலில் ஏற்படும் கழிவு பொருட்களை சிறுநீரகத்திற்கு தோழனாக நின்று வெளியேற்றுகிறது. வியர்வை வழியாக தாது உப்புகள், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படும். வியர்வை வெயிலில் காயும்போது வெண்மையாக உப்பு படர்வதை அனைவரும் உணரலாம்.

வியர்வையின் பணிகளை ஆளுமை செய்வது மூளையும், நரம்புகளும் தான். எனவே ஒவ்வொருவரின் உடல் இயக்கத்தை மையமாக கொண்டும் மனதை மையமாக கொண்டும் வியர்வை சுரக்கிறது. வியர்வையின் தன்மைகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒரு சிலர் சிறிய வேலை செய்தாலோ, மனதில் பயம் ஏற்பட்டாலோ, வியர்வையில் குளித்துவிடுவார்கள். ஒரு சிலர் தனக்கு வியர்வையே வராது என்று கூறுவதையும் கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு முகத்தில், தலையில், மார்பில், உள்ளங்கால்களில் மட்டும் அதிகமாக சுரக்கும். மாணவர்களில் சிலருக்கு உள்ளங்கை யில் வியர்வை அதிகமாகி, தேர்வு எழுதும்போது அவஸ்தைப்படு கிறார்கள். அதனால் நனைந்துவிடலாம்.

வியர்வை வாடையை பலராலும் முடியும். ஆனால் ஒரு சிலருக்கு வியர்வை துர்நாற்றமடிப்பது உண்டு. இதற்கு சருமத்தில் இருக்கும் நோய் நுண்கிருமிகள் மற்றும் உடலில் நோய்களை குறிப்பிடும்தன்மையும் அடிப்படை காரணம். ஒருவர் காய்ச்சலில் படுத்திருக்கும்போது தோன்றும் வாடை, அவரது உடலில் இருந்து நோய்கிருமிகளின் கழிவுகள் துர்நாற்றத்துடன் வெளிப்படுவதை உணரச்செய்கிறது.

வியர்வை நிறமற்றது. ஆனால் ஒரு சிலருக்கு வியர்வை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அக்குள், உறுப்புகளில் சுரப்பது தனித்தன்மையை காட்டுகிறது. ஒரு சிலருக்கு அணியும் துணிகள், உள்ளாடைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு வியர்வை காரணமாக இருக்கும். சிலருக்கு வித்தியாசமாக ஒரு பகுதியில் மட்டும் வியர்வை ஏற்படும். ‘இதோ பாரு அவருக்கு மூக்கில் வேர்க்கிறது. கோபம் வருகிறது...! என்று மனதுடன் ஒருமைப்படுத்தி சிலர் பேசுவதை கேட்டிருக்கலாம்.

காய்ச்சல் ஏற்பட்டால் ஏற்படும் வியர்வை ‘’ இருக்கும். மனப் பயம், மயக்கம் ஏற்படும்போது அதுவே ‘’ இருக்கும். அதுவும் ஒருநபர் படுக்கையில் இருக்கும்போது சருமம் ‘களிமண்’ காட்சியளித்து, குளிர்ந்த வியர்வை அரும்புகள் தென்படும். அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அறிவுறுத்தும்.

தூங்கும் போது வியர்வை ஏற்பட்டால் அது உடல் இயக்க கோளாறுகளை பிரதிபலிக்கும். உடல் கோளாறுகளான உடல் பருமன், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம்.

அக்குள், மர்ம உறுப்புகளில் தோன்றும் எண்ணெய் பசையுடன் கூடிய வியர்வைக்கு ஆண், பெண் இருபாலருக்கும் பால் உணர்வை தூண்டும் சக்தி உள்ளது. இது விலங்கினங்களில் அதிகமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் ஆண், பெண் இருபாலருக்கும் பிரத்யேக வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படுவதை விளம்பரங்களில் பார்க்கலாம்.

உடலின் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை அரிய வைப்பது ‘பசி’ உணர்வுதான். எனவேதான் ‘பசி நன்றாக இருக்கிறதா?’ என்று மருத்துவர்கள் கேட்பார்கள். அது தொடர்புடைய இதர கேள்விகளையும் கேட்பார்கள். ஆனால் ஹோமியோபதி மருத்துவர்கள் மட்டுமே ‘உங்களுக்கு வியர்வை அதிகம்படுகிறதா?’ என்ற கூடுதல் கேள்வியை கேட்பார்கள். மேலும் அவர்கள் முழுமையாக வியர்வையின் தன்மைகளை கேட்டறிவது, உடல் இயக்கம் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளத்தான்!

ஒரு சிலர் ‘என் உடம்பு சூடாக இருக்கிறது...’ என்று குறிப்பிடுவது வேடிக்கையாக தோன்றும். ஆனால் அதற்கு பலவிதமான அர்த்தங்கள் உண்டு. அவர்கள் இயல்பாக நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் காரணமாக துருதுருவென்று இருப்பார்கள். சிந்தனைகள் விறுவிறுப்பாக இருக்கும். ஏதாவது சாதிக்க துடிப்பார்கள்.

ஆனால் ‘குளிர்ந்த உடம்பு’ என்று குறிப்பிட்டு சொல்கிறவர்கள் ‘ஏனோ தானோ’ என்று இருப்பார்கள். பணியை முழுமைப்படுத்தாமல் தவிப்பார்கள். இதுபோன்ற வித்தியாசமான கருத்துகளுக்கு ஹோமியோபதி மருத்துவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் தாகம், தூக்கம் மற்றும் பிற உடல் குறிகளுக்கும் முக்கியத்துவம் தருவார்கள்.

ஒரு பதினைந்து வயது மாணவனுக்கு முகத்திலும், கைகளிலும் புறங்கை பகுதி யில் ஏற்பட்ட மருக்களுக்கு ஹோமியோபதி சிகிச்சை பெற அணுகினார்கள். அவர் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் அதிகமாக வியர்ப்பதை கூறினார். “தேர்வு எழுதும்போது கையில் கைக்குட்டை வைத்து, துடைத்துக் கொண்டே எழுதுவேன், இல்லையென்றால் விடைத்தாள் நனைந்துவிடும். எனது தனித்திறமையை காட்ட முடியாமல் வியர்வையால் தவிக்கிறேன்” என்று கூறினார்.

‘மரு’ என்று நோய்க்குறி, ‘வியர்வை’ என்ற உடல் குறி மற்றும் மனக்குறிகள் அடிப்படையில் ஹோமியோபதி மருந்து அளிக்கப்பட்டது. மருக்களும் மறைந்து விட்டன. வியர்வையும் குறைந்துவிட்டது.

I HOPE THIS ANSWER IS HELPFUL FOR U THANKS

Answered by steffiaspinno
0

அ‌ட்‌ரி‌ன‌லி‌ன் ஹா‌ர்மோ‌ன் சுர‌ப்பு

  • சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான்.
  • தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன.
  • இந்நிலை அவனுக்கு அ‌ட்‌ரி‌ன‌லி‌ன் ஹா‌ர்மோ‌ன்  சுர‌ப்‌பினா‌ல்  ஏ‌ற்படு‌கிறது.
  • அ‌ட்‌‌ரின‌ல் எ‌ன்ற நாள‌மி‌ல்லா சுர‌ப்‌பி‌யி‌ன் அ‌ட்‌ரின‌ல் மெடு‌ல்லா பகு‌தி‌யி‌ல் சுர‌க்க‌ப்படு‌ம் ஹா‌ர்மோனே அ‌ட்‌‌ரின‌லி‌ன் அ‌ல்லது எ‌‌பிநெஃ‌‌ப்‌ரி‌ன் ஆகு‌ம்.
  • இ‌ந்த ஹா‌ர்மோ‌ன் அவசர கால ஹா‌ர்மோ‌ன் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • பொதுவாக இ‌ந்த ஹா‌ர்மோ‌ன்க‌ள் மன அழு‌த்த‌ம் ம‌ற்று‌ம் உண‌ர்‌ச்‌சி வய‌ப்படு‌ம் போது உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • அ‌ட்‌‌ரின‌லி‌ன் ஹா‌ர்மோ‌ன் ஆனது இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகரி‌த்த‌ல், சுவாச ‌வீத‌த்‌தினை அ‌திக‌ரி‌த்த‌ல், க‌ண் பாவை‌யினை ‌வி‌ரிவடைய செ‌ய்த‌ல், தோ‌லி‌ன் அடி‌யி‌ல் செ‌ல்லு‌ம் இர‌த்த ஓ‌ட்ட‌த்‌தினை குறை‌த்த‌ல் முத‌லிய ப‌ணிகளை செ‌ய்‌கிறது.  
Similar questions