ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் கொழுப்பின் பங்கு என்ன ?
Answers
Answered by
0
ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் கொழுப்பின் பங்கு
- இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய குறைபாட்டு நோயே இதய நோய்கள் ஆகும்.
- இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD) ஏற்படுகிறது.
- இதய நோய் ஆனது குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி கொழுப்பு படிதல் பல ஆண்டுகள் நீடிப்பதினால் ஏற்படுகிறது.
- இந்த கொழுப்பு படிவின் விளைவானது மெல்லிய கொழுப்பு கீரல்களில் தொடங்கி சிக்கலான நாரிழைத் தட்டுகளான பிளேக் ஏற்படுவது வரை அமையலாம்.
- கொழுப்பு படிவதன் காரணமாக இதயத் தசைகளுக்கு இரத்தத்தினைக் கொண்டு செல்கிற பெரிய மற்றும் நடுத்தர அளவினை கொண்ட தமனிகளின் பாதைகளை சுருங்கச் செய்வதன் மூலம் ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் என்ற நோய் உண்டாக காரணமாக அமைகிறது.
- கொழுப்பு படிதல் ஆனது ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் நோய் மட்டும் அல்லாது இஸ்கிமியா என்ற இதயத் தசைகளுக்கு குறைவான இரத்த ஓட்டம் மற்றும் இதயத் தசை நசிவுறல் என்ற இதயத் தசை திசுக்களின் இறப்பு நோய் உண்டாகவும் காரணமாக உள்ளது.
Similar questions