India Languages, asked by anjalin, 7 months ago

காடுகள் அழிப்பினால் மழை பொழிவு _______________

Answers

Answered by steffiaspinno
0

குறை‌கிறது  

காடுக‌ள்  

  • அடர்ந்த மரங்கள், புதர்கள், சிறு செடிகள், கொடிகள் முத‌லியனவ‌ற்றை கொ‌ண்ட ப‌‌ல்வேறு தாவர ம‌ற்று‌ம்‌ ‌வில‌ங்கு இன‌ங்க‌ளி‌ன் வா‌‌‌ழிடமாக ‌விள‌ங்‌க‌க்கூடியதே காடுக‌ள் ஆகு‌ம்.
  • காடுக‌ள் ந‌ம் நா‌ட்டி‌ன் பொருளாதார மே‌ம்பா‌ட்டி‌ற்கு மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது.
  • பெரு‌கி வரு‌ம் ம‌க்க‌ள் தொகை, நகரமயமாத‌ல் முத‌‌லியன காரண‌ங்களா‌ல் காடுக‌ள் அ‌ழி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

காடுக‌ள் அ‌‌‌ழி‌க்க‌ப்படுவதா‌ல் உண்டாகும் விளைவுகள்

  • மர‌ங்க‌ள் வெ‌‌ட்ட‌ப்ப‌ட்டு காடுக‌ள் அ‌‌ழி‌‌க்க‌ப்படுவதா‌ல் மழை பொ‌ழிவு குறைத‌ல், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு முத‌லியன ஏ‌ற்படு‌கி‌ன்றன.
  • மேலு‌ம் பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல், உலக வெ‌ப்ப மயமாத‌ல், ப‌னி‌‌ப் பாறைக‌‌ள்  உருகுத‌ல், கட‌‌ல் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் அ‌‌திக‌ரி‌த்த‌ல்,   உயிர்புவி சுழற்சியில் சமமற்ற நிலை முத‌லிய சு‌ற்று‌ச்சூழ‌ல் சா‌ர்‌ந்த ‌பிர‌ச்சனைக‌ள் ஏ‌ற்படு‌ம்.
Similar questions