India Languages, asked by anjalin, 10 months ago

தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவானது எவ்வாறு ஊட்டம் பெறுகிறது ?

Answers

Answered by shanmu1509
1

Answer:

தொப்புள் கொடி

mark as brainliest answer

Answered by steffiaspinno
2

தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவானது ஊ‌ட்ட‌ம் பெறு‌ம் முறை

  • கருவுற்ற பிறகு தாயின் கருப்பையில் கருமுட்டையானது பிளத்தல் மற்றும் கருக்கோளமாதல், பதித்தல், கேஸ்ட்ருலாவாக்கம், உறுப்பாதல், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம், கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு, பாலூட்டுதல் ஆகியவை கருவுறுதலில் நடைபெறும் மாறுதல்களாகும்.
  • தாய் சேய் இணைப்பு திசுவானது வளரும் கருவிற்கும், தாய்க்கும் இடையே ஒரு தற்காலிக இணைப்பை ஏற்படுத்துகிறது.
  • இவை உணவு‌ப்பொருட்கள் பரிமாற்றம், ஆ‌க்‌சிஜ‌ன் பரவல், நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றுதல், கார்பன்-டை-ஆக்சைடை நீக்குதல் போன்ற செயல்களுக்கு அனுமதி அளிக்கிறது.
  • தாய் சேய் இணைப்பு திசுவானது இரத்த நாளங்களை கொண்ட கொடியுடன் இணைக்கபடுகின்றன.
  • இதுவே தொப்புள் கொடி ஆகும்.
  • இவ்வாறு தொப்புள் கொடியின் வழியாக தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவிற்கு ஊட்டம் அளிக்கப்படுகிறது.
Similar questions