India Languages, asked by anjalin, 9 months ago

செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் _________ ஹார்மோன் ஆகும்.

Answers

Answered by Agamsain
0

Answer:

த்ரோக்ஸின் ஹார்மோன் என்பது உயிரணு நீடித்தல் மற்றும் எண்டோடெலியல் செயலிழப்பை உருவாக்கும் கலமாகும்.

Answered by steffiaspinno
0

ஆ‌க்‌சி‌ன்க‌ள்

  • ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், அப்சிசிக் அமிலம், எத்திலின்  ம‌ற்று‌ம் ஜிப்ரல்லின்கள் ஆகியவை தாவர ஹார்மோன்கள் என்று அழைக்க‌ப்படுகின்றன.
  • ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள் ஆகியவை தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்தப்படும்  ஹார்மோன்கள் ஆகும்.
  • அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
  • வேர் மற்றும் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் தாவரத்தினை  நீட்சி அடைய செய்கின்றன.
  • தாவர ஹார்மோன்களில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹார்மோன் ஆக்சின் ஆகும்.
  • பிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் என்பவர் தாவரங்களில் ஆக்சின் என்னும் ஹார்மோன் இருப்பதை  கண்டறிந்தார்.
  • ஆக்சின்கள் இரண்டு வகைப்படும்.
  • அவை இயற்கை ஆக்சின்கள் மற்றும் செயற்கை ஆக்சின்கள் ஆகும்.
  • செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் ஆக்சின் என்னும் தாவர  ஹார்மோன் ஆகும்.
Similar questions