குழந்தைப் பேற்றிற்குப்பின் பால் சுரக்க காரணமான ஹார்மோன் எது?
Answers
Answered by
0
Answer:
பால் உற்பத்தியில் ஹார்மோன் கட்டுப்பாடு. தாய்ப்பாலூட்டுவதை நேரடியாக பாதிக்கும் இரண்டு ஹார்மோன்கள் உள்ளன: புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடாஸின். ஈஸ்ட்ரோஜன் போன்ற பல ஹார்மோன்கள் பாலூட்டலில் மறைமுகமாக ஈடுபடுகின்றன (2). ஒரு குழந்தை மார்பகத்தை உறிஞ்சும்போது, உணர்ச்சித் தூண்டுதல்கள் முலைக்காம்பிலிருந்து மூளைக்குச் செல்கின்றன.
Answered by
0
ப்ரோலாக்டின்
- பிட்யூட்டரி சுரப்பியானது முன்கதுப்பு மற்றும் பின்கதுப்பு என்னும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- இவற்றின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவற்றின் தன்மையில் மாறுபடும்.
- பிட்யூட்டரி முதன்மை சுரப்பியாக முதுகெலும்பு உயிரினங்களில் காணப்படுகிறது.
- முன்கதுப்பு அடினோ ஹைப்போபைசிஸ் எனவும், பின்கதுப்பு நியூரோ ஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கபடுகின்றன.
- பிட்யூட்டரியின் பின் கதுப்பினால் ஆன்டிடையூரிடிக், ஆக்ஸிடோசின் சுரக்கப்படுகிறது.
- வளர்ச்சி ஹார்மோன், தைராய்டை தூண்டும் ஹார்மோன், ப்ரோலாக்டின் ஆகிய ஹார்மோன்கள் பிட்யூட்டரியின் முன்கதுப்பினால் சுரக்கப்படுகிறது.
- கர்ப்ப காலத்தில் பால் சுரப்பிகளின் வளர்ச்சியை தூண்ட செய்வது ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோன் ஆகும்.
- மேலும் குழந்தை பெற்ற பிறகு, பால் உற்பத்தியை தூண்ட செய்யும் பணியினை ஏற்றுக்கொள்கிறது.
- ப்ரோலாக்டின் ஹார்மோன் லாக்டோஜெனிக் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions