India Languages, asked by anjalin, 9 months ago

பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல் செயல்படுகின்றன?

Answers

Answered by Agamsain
1

Answer:

பிட்யூட்டரி ஹார்மோன்களின் அட்டவணை. கார்டிசோல் என்ற ஹார்மோனை உருவாக்க அட்ரீனல் சுரப்பியைத் தூண்டுகிறது. ACTH கார்டிகோட்ரோபின் என்றும் அழைக்கப்படுகிறது. தைராக்ஸின் எனப்படும் அதன் சொந்த ஹார்மோனை சுரக்க தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது.

Answered by steffiaspinno
0

பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள்

  • பிட்யூட்டரி சுரப்பியானது முன்கதுப்பு  மற்றும் பின்கதுப்பு என்னும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • முன்கதுப்பு அடினோ ஹைப்போபைசிஸ் எனவும், பின்கதுப்பு நியூரோ ஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கபடுகின்றன.
  • பிட்யூட்டரியின் பின் கதுப்பினால் ஆன்டிடையூரிடிக், ஆக்ஸிடோசின் சுரக்கப்படுகிறது.
  • ஆன்டி டையூரிடிக் ஹார்மோன் உடலில் இருக்கும் நீரானது சிறுநீர் மூலமாக அதிகமாக வெளியேறுதலை தடுக்கிறது.
  • எனவே இது சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன் என அழைக்கபடுகின்றது.
  • ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் உடலில் உள்ள நீர் வெளியேறி நீர் இழப்பை அதிகரிக்கிறது.
  • இதுவே பாலியூரியா என்கிறோம்.
  • ஆக்ஸிடோசின் பெண்களில் குழந்தையை பெற்று எடுக்கும் போது, கருப்பையை சுருக்கியும், விரிவடையவும் செய்கிறது.
  • இதனால் குழந்தை எளிதாக வெளியில் வருகிறது.
Similar questions