இன்சுலின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது ?
Answers
Answered by
0
இன்சுலின் குறைபாடு ஏற்படும் விதம்
- கணையத்தில் உள்ள பீட்டா செல்களால் இன்சுலின் சுரக்கப்படுகிறது.
- இன்சுலின் இயல்பாக சுரக்கும் அளவை விட குறைவாக சுரந்தால் அதற்கு இன்சுலின் குறைபாடு என்று பெயர்.
- இதனால் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
- இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தல், அதிக அளவு சிறுநீர் வெளியேறுதல் , தண்ணீர் தாகம் அதிகமாக ஏற்படுதல் , அதிக அளவு குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேறுவதால் அதிகப்படியான பசி ஏற்படுதல், சோர்வு மற்றும் உடல் எடை குறைந்து காணப்படுதல் ஆகியவை இன்சுலின் குறைபாட்டால் வரும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.
- சுற்றுசூழல் காரணிகள், மரபணு மரபுவழி, உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளுதல் ஆகிய காரணங்களால் இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது.
Similar questions