India Languages, asked by anjalin, 1 year ago

புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.

Answers

Answered by Agamsain
0

Answer:

புகைப்பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் நோய்களில் சிஓபிடி அடங்கும், இதில் எம்பிஸிமா மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை அடங்கும். சிகரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், புகையிலை புகை ஒரு தாக்குதலைத் தூண்டும் அல்லது தாக்குதலை மோசமாக்கும்.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

புகைப்பதால் வரும் நோ‌ய்க‌ள்  

  • புகைபிடிப்பதால் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதய நோயை உண்டாக்குகின்றன.
  • இரைப்பை மற்றும் முன்சிறுகுடலில் புண்களை ஏற்படுத்துகின்றன.
  • புகைபிடிப்பதால் மூச்சுக்குழல் மற்றும் தொண்டை ஆகிய சுவாச பாதையில்  பாதிப்பை  ஏற்படுத்துகிறது.
  • மேலும் புகைபிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு புற்றுநோயை உண்டாக்குகின்றது.
  • ஆக்சிஜனை உடல் முழுவதும்  எடுத்து‌ச் செல்வது ஹீமோகுளோபின் பணியாகும்.
  • புகைபிடித்தலின் போது உண்டாகும்  புகையில் கார்பன்- மோனாக்சைடு உள்ளது.
  • இது இரத்த சிவப்பணுவில் உள்ள  ஹீமோகுளோபினுடன்  இணைந்து ஆக்சிஜன் எடுத்து செல்வதை தடை செய்கிறது.
  • நுரையீரலின் மூச்சு சிற்றறையில் வீக்கத்தை உண்டாக்குகிறது.
  • தொண்டை மற்றும் மூச்சு‌க்குழலில் வீக்கம், மூச்சுக்குழல் அழற்சி, நுரையீரல் காசநோய் ஆகியவை புகை பிடிப்பதனால் வருகின்றன.
  • இவையே புகைபிடிப்பதால் வரும் நோய்களாகும்.
Similar questions