"டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____________ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____________ தூண்டலையும் கடத்துகின்றன. அ) வெளியே / வெளியே ஆ) நோக்கி/ வெளியே இ) நோக்கி / நோக்கி ஈ) வெளியே / நோக்க"
Answers
Answered by
0
Answer:
unable to understand pls translate in English
Answered by
0
நோக்கி/ வெளியே
- நியூரான்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
- மனிதனில் காணப்படும் மிக நீளமான செல் நரம்பு செல் அல்லது நியூரான்கள் எனப்படும்.
- நியூரான்கள் சைட்டான், டெண்ட்ரைட்டுகள், ஆக்சான் என மூன்று பகுதிகளால் ஆனது.
சைட்டான்
- செல்லின் உடலமானது சைட்டான் என்று அழைக்கப்படுகின்றது.
- இதன் மையப்பகுதியில் சைட்டோபிளாசம் நிறைந்திருக்கும்.
டெண்ட்ரைட்டுகள்
- செல் உடலத்தின் வெளிப்புறத்தில் கிளைகள் போன்று காணப்படும் பகுதிக்கு டெண்ட்ரைட்டுகள் என்று பெயர்.
- இவை நரம்புகளுக்கு அனுப்பப்படும் தூண்டல்களை சைட்டான்களை நோக்கி கடத்துகிறது.
ஆக்சான்கள்
- தனித்த, நீளமான மெல்லிய பகுதிக்கு ஆக்சான்கள் என்று பெயர்.
- இவை செல் உடலத்திலிருந்து வெளியே தூண்டலை கடத்துகின்றன.
- அதாவது சைட்டானில் இருந்து தூண்டல்களை எடுத்து செல்லும் பணியினை செய்கின்றன.
Similar questions