"ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகிய வற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது? அ) முகுளம் ஆ) பெருமூளை இ) பான்ஸ் ஈ) ஹைபோதலாமஸ் "
Answers
Answered by
0
Answer:
புற நரம்பு மண்டலத்தின் பல தன்னியக்க செயல்பாடுகளுக்கான கட்டுப்பாட்டு மையமாக ஹைபோதாலமஸ் உள்ளது. எனவே, ஒரு விபத்தில் ஹைபோதாலமஸ் சேதமடைந்தால், நீர் சமநிலையின் கட்டுப்பாடு, பசி மற்றும் உடல் வெப்பநிலை இழக்கப்படும்.
Answered by
0
ஹைபோதலாமஸ்
- முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்கபட்டுள்ளது.
- பெருமூளையின் உட்புற பகுதி மெடுல்லா என்று அழைக்கப்படுகிறது.
- இந்த மெடுல்லாவை சுற்றி அமைந்திருக்கும் பகுதிக்கு தலாமஸ் என்று பெயர்.
- தலாமஸ் பகுதிக்கு கீழே அமைந்துள்ள பகுதி ஹைப்போதலாமஸ் என்று கூறப்படுகிறது.
- நாளமில்லா சுரப்பி மண்டலத்தையும், தலாமஸ் சுரப்பி மண்டலத்தையும் ஹைப்போதலாமஸ் இணைக்கிறது.
- எல்லா சுரப்பிகளையும் கட்டுபாட்டில் வைத்திருக்கும் பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பினால் சுரக்கப்படும் ஹார்மோன்களை கட்டுபடுத்துவது ஹைப்போதலாமஸ் ஆகும்.
- மேலும் இது பசி, தாகம், மயக்கம், தூக்கம், வியர்வை, கோபம், பயம், பாலுறவு கிளர்ச்சி, உடலை சம நிலையில் வைத்தல், இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுபடுத்தும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.
Similar questions