வினா
எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
சொ
Answers
Answered by
0
Answer:
தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன
Explanation:
தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன :
- எங்கள் தமிழ் என்னும் நாமக்கல் கவிஞரின் பாடல் தமிழ் மொழியின் பண்புகளாகக் கூறுவன.பின்வறுமாறு.
- நம் தாய்மொழி தமிழ். அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருவது நம் தமிழ் மொழி.
- இத்தகைய தமிழ் மொழி தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
- தமிழ் மொழியைக் கற்று அறிந்த சான்றோர்கள், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
- தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.
- கொல்லாமை என்னும் குறிக்கோளையும் பொய்யாமை என்னும் கொள்கையையும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறனும் உதவும்.
- அதுபோல, நம் தமிழ் மொழி எல்லோரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.
- தமிழ் மொழி, அச்சத்தைப் போக்கி இன்பம் தரும் தேன் போன்ற மொழி ஆகும்.
காந்தியக்கவிஞர்:
- நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் இராமலிங்கனார் ஆகும்.
- இவரின் சிறப்பு பெயர்கள் காந்தியக் கவிஞர், நாமக்கல் கவிஞர் ஆகும்.
- இவர் தமிழ் அறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் முதலிய சிறப்புகளைப் பெற்றவர்.
- இவரின் படைப்புகள் என்கதை, சங்கொலி, நாமக்கல் கவிஞர் பாடல்கள், மலைக்கள்ளன் ஆகியனவாகும்.
- காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவர் காந்தியடிகளின் மறைவுக்குப் பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 52 வாரங்கள் இசை பாடல்களை எழுதினார்.
- காந்தியடிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர் காந்தியக் கவிஞராக மாறினார். இவையே நாமக்கல் கவிஞர், காந்திய கவிஞர் என அழைக்கப்படக் காரணம் ஆகும்.
- 1972இல் ஆகஸ்ட் 24ம் தேதி இம்மனுலகை விட்டு விண்ணுலகம் அடைந்தார்.
For more related question : https://brainly.in/question/15759022
#SPJ1
Similar questions