India Languages, asked by sennthansoundrapandi, 8 months ago

நான் ஒர் தமிழ் எழுத்தாளரானால் கட்டுரை

Answers

Answered by KajalBarad
0

                        நான் ஒர் தமிழ் எழுத்தாளரானால்

குறிப்புச்சட்டகம் :

                        முன்னுரை

                         எழுத்தாளர் ஆவதன் தகுதிகள்  

                         நான் ஒரு எழுத்தாளர் அனால்

                         நான் எழுத்தாளர் ஆவதன் நோக்கம்                

                         முடிவுரை

முன்னுரை:

ஒவ்வொருவற்கும் வாழ்வில் ஒரு இலக்கு இருக்கும். அதை நோக்கி பயணம் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அந்த இலக்கு உருவாக ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ஏதேனும் ஈர்ப்பு அல்லது சாதிக்க வேண்டும் என்ற ஒரு முனைப்பு வந்திருக்கும். அதுபோலவே எனக்கும் ஒரு இலக்கு இருக்கின்றது அது எழுத்தாளர் ஆவது ஆகும்.

எழுத்தாளர் ஆவதன் தகுதிகள்:

ஒருவர் சிறந்த எழுத்தாளர் ஆக வேண்டுமாயின் ஓர் எழுத்தாளர் முதலில் எழுத்து பிழையின்றி எழுத வேண்டும். ஏனெனில்,மக்கள் எதிர்பார்ப்பு இலக்கிய தமிழ் அல்ல, பிழையில்லா தமிழ்.ஆகும்.

மேலும், எந்த ஒரு படைப்பை எழுதும் போதும் நம் எண்ண அலைகளை சிறைப்பிடித்து எழுத வேண்டுமே தவிர, இது எல்லோராலும் போற்ற பட வேண்டும் என்றோ, சிறந்த படைப்பாக வேண்டும் என்றோ எழுத கூடாது.அப்படி செய்தால் உங்கள் எண்ண ஒட்டம் விளைவுகளை சிந்தித்த வன்னம் தங்கள் எழுத்துக்கு தடங்கலாகவே வரும்.

எந்த அளவுக்கு ஒருவரிடத்தில் ஆழ்ந்த கற்றல் அறிவு இருக்கிறதோ, அதுவே அவருடைய கற்பனைத் திறனை மேம்படுத்தி சிறந்த எழுத்தாளராக உருமாற்றுகிறது.கற்றல் என்றவுடன் புத்தகங்களைப் படித்து கற்பது இல்லை. சிலருக்கு வாழ்க்கை அனுபவங்களும் சிறந்த பாடமாக அமையும். அதைக்கொண்டே நாம் சிறப்பான தொகுப்புகளை மனம் கவரும் வகையில் வெளியிட முடியும்.

எந்த அளவுக்கு ஒரு விடயத்தைப் பற்றிய புரிதலும், தெளிவும், அறிவும் நம்மிடத்தில் இருக்கிறதோ, அதுவே ஓர் எழுத்தாருக்கு அவருக்கானதை வடித்திட உதவுகிறது.

நம் நண்பர்கள் மற்றும் சுற்றி இருப்பவர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கூடுமான வரை நமது படைப்புகளை புகழத்தான் செய்வர். அந்த பாராட்டு என்ற போதையிலிருந்து வெளி வந்து மற்றவற்களின் கருத்துக்கும் முக்கியதுவம் தந்து தவறுகளை திருத்தினால் விரைவில் நாம்  சிறந்த எழுத்தாளரே!

நான் ஒரு எழுத்தாளர் அனால்:

நான் ஒரு எழுத்தாளர் அனால் நான் நமது தாய்த்தமிழை போற்றும் வகையில் சிறந்த படைப்புகளை மக்களுக்கு அளிப்பேன். எல்லோர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு கதையாவது  இருக்கிறது. அந்தக் கதையை  எப்படி கொடுக்க வேண்டும் என்பதில்தான் எழுத்தாளனின் திறமை ஒளிந்திருக்கிறது!. நான் படைக்க போகும் ஒவ்வொரு படிப்பிலும் மக்கள் எதிர்பார்க்கும் சுவாரசியமான எழுத்து படைப்புகளை கொடுத்து மக்களின் மனதை கவர்வேன்.மக்களின் மனதில் சிறந்த இடத்தை பிடித்து எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

எனது கற்பனைத்திறனை மெருகேற்றி எனது அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டு அதை எனது படைப்புகளில் வெளிப்படுத்துவேன்.

தற்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு மக்கள் பயன்படுத்தும் வகையில் நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் கொடுப்பேன்.

நான் எழுத்தாளர் ஆவதன் நோக்கம் :

சிறுவயதில் இருந்து எனது முன்னோடியாக நான் கருதுவது எழுத்தாளர் சுஜாதாவை தான். எனக்கு அவரது படைப்புகள் எல்லாம் மிகவும் பிடிக்கும். மிகவும் எதார்த்தமான வகையில் மக்களுக்கு புரட்சி மிக்க கருத்துக்களை கொண்டு சேர்ப்பதில் அவர் வல்லமை மிக்கவர் ஆவார்.

இதுவே என்னை அவர் பக்கம் ஈர்த்தது. என்னை ஈர்த்ததுமட்டுமல்லாமல் என்னை அவரை போல ஒரு சிறந்த எழுத்தாளராக ஆகா வேண்டும் என்று எனது ஆழ்மனதில் பதிய வைத்தது.

அவரது படைப்புகளில் சிறந்த படைப்பாக நான் கருதுவது ஆயிரத்தில் இருவர் ஆகும். இதுவே என்னை அவரின் எழுத்து படைப்புகளுக்கு ஈர்த்தது.

முடிவுரை:

ஒரு எழுத்தாளன் வெற்றி சிறந்த படைப்புகளை படைத்தது அந்த படைப்பினால் நாட்டில் உள்ள மக்களுக்கு புரட்சிகரமான எண்ணங்களை எழுப்பி நாட்டை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்வேன். எழுத்துக்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதை ஒருவருடைய படைப்பு எடுத்துச்சொல்லும். அத்தகைய படைப்பினை நான் வெளியிட்டு வலிமையை காட்டுவேன். ஒரு எழுத்தாளர் ஆவதே எனது லட்சியம் ஆகும்.

#SPJ2

Similar questions