உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினர்களுக்கு செய்த விருந்தோம்பல் விரிவிது எழுதுக
Answers
Answer:
- hi how are you in Brainly
உறவினர்களுக்கு செய்த விருந்தோம்பல் :
எங்கள் வீட்டிற்கு எனது மாமாவும் அத்தையும் கடந்தவாரம் வந்திருந்தனர். அவர்கள் ஊர் பண்டிகைக்கு அழைப்பதற்காக வந்திருந்தனர். அவர்கள் நுழைவு வாயிலில் நின்றுகொண்டு காலிங்பெல்லை அழுத்தினர். அம்மா கதவை திறந்தார். திறந்ததும் அம்மாவின் முகம் புன்னகையில் பிரகாசித்தது. நெடுநாள் பிறகு அவர்களை கண்ட ஆனந்தம். அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்து நாற்காலியில் அமர வைத்தார். பிறகு என்னிடம் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க சொன்னார். அம்மா தேநீர் போட்டுக் கொண்டிருந்தார். நான் தண்ணீர் கொடுத்தேன் விருந்தினருக்கு, அவர்கள் என்னிடம் என் படிப்பு பற்றி விசாரித்தனர். நானும் அவர்கள் குடும்பத்தினர் பற்றி நலம் விசாரித்தேன். என் அம்மா அவர்களுக்கு தேநீர் கொண்டு தந்தார். பிறகு அவர்களிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அம்மா அவர்களை சாப்பிட அழைத்தார். இன்னும் நிறைய இடங்களுக்கு அழைப்பிற்கு செல்ல வேண்டும் என்று மறுத்துவிட்டனர். அடுத்தமுறை கட்டாயம் சாப்பிட்டுவிடடுதான் போவோம் என்று கூறி விடை பெற்றனர்.
#SPJ3