"ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து. அ) மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும் ஆ) பேச்சு மொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை. இ) எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது. ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
Answers
Answered by
4
Answer:
Please translate in english............
Answered by
4
எழுத்து மொழியைவிட பேச்சு மொழி எளிமையானது
- இராசேந்திரன் என்ற இயற்பெயரை உடைய இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் என பன்முகத் திறமை உடையவராக திகழ்ந்தார்.
- இவர் பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதினை பெற்றார்.
- இவர் நம் பாடப்பகுதியில் உள்ள பேச்சு மொழியும் எழுத்து மொழியும் என்ற உரைநடையின் ஆசிரியர் ஆவார்.
- இவரின் உரைநடையில் இடம்பெற்று உள்ள ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது என்ற வரிகள் உணர்த்தும் கருத்து எழுத்து மொழியைவிட பேச்சு மொழி எளிமையானது என்பது ஆகும்.
Similar questions