"மொழி முதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க அ) அன்னம், கிண்ணம் ஆ) டமாரம், இங்ஙனம் இ) ரூபாய், லட்சாதிபதி ஈ) றெக்கை, அங்ஙனம்
Answers
Answered by
22
அன்னம், கிண்ணம்
மொழி முதல் எழுத்துக்கள்
- ஒரு சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள் மொழி முதல் எழுத்துக்கள் ஆகும்.
- பன்னிரு உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வராது.
- ஆனால் மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்கள் சொல்லிற்கு முதலில் வரும்.
- உயிர்மெய் எழுத்துக்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்ற பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும்.
- இதில் ங என்ற உயிர்மெய் எழுத்து ஙனம் என்ற சொல்லில் மட்டும் சொல்லின் முதலில் வரும்.
- ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்ற எட்டு உயிர்மெய் எழுத்துக்களின் வரிசை சொல்லின் முதலில் வராது.
- அதே போல ஆய்த எழுத்தும் சொல்லின் முதலில் வராது.
- எனவே மேலே உள்ளவற்றுள் அன்னம், கிண்ணம் என்ற சொற்களே முறையாக உள்ளது.
Answered by
0
Answer:
மொழி முதல் அடிப்படையில் முறையாதைக் கண்டுபிடிக்க
Similar questions