என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிகண் அழகே, வழி வழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே . இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
Answers
Answered by
4
Answer:
Please translate in english...........
Answered by
2
வினையாலணையும் பெயர்
- வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் + பெயர்.
- ஒரு வினையினை செய்யக்கூடியவருக்கு பெயராக வருவது அல்லது ஒரு வினைமுற்று பெயரின் தன்மையினை பெற்று, வேற்றுமை உருபினை ஏற்றும் ஏற்காமலும் மற்றொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் என அழைக்கப்படுகிறது.
- தொழிற்பெயர் ஆனது காலத்தினை காட்டாது.
- தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் என்ற பாகுபாடுகள் இல்லை.
- ஆனால் வினையாலணையும் பெயர் காலத்தினை காட்டும்.
- ஒருமை, பன்மை, பால் என்ற பாகுபாடுகள் காணப்படும்.
- என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிகண் அழகே, வழி வழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே என்ற இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்கள் தொழுதவர், உழுதவர், விதைத்தவர் மற்றும் வியர்த்தவர் ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago