நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது
Answers
Answered by
39
நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் குறிப்பிடுவன
பாயிரம்
- பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்பாயிரம் என இரு வகைப்படும்.
பொதுப்பாயிரம்
- நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை ஆகிய ஐந்தினை பற்றி கூறுவது பொதுப்பாயிரம் ஆகும்.
சிறப்பாயிரம்
- நூலாசிரியர் பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு, நூலின் பெயர், தொகை, வகை, விரி முதலியனவற்றுன் எதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலையினைக் கேட்போர் (மாணவர்), நூலினைக் கற்பதினால் பெறுகின்ற பயன்கள் ஆகிய எட்டுச் செய்திகளும் சிறப்பாயிரத்தில் கூறப்பட்டு உள்ளது.
- பொதுப்பாயிரம் மற்றும் சிறப்பாயிரத்தில் உள்ள செய்திகளே நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுமென நன்னூல் குறிப்பிடுகிறது.
Answered by
5
Answer:
நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:
நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.
Similar questions