"தவறான இணையை தேர்வுச் செய்க அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர் ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர் இ) கடல் + அலை - உயிர் + மெய் ஈ) மண் + வளம் - மெய் + மெய்
Answers
Answered by
18
கடல் + அலை - உயிர் + மெய்
எழுத்துக்களின் அடிப்படையில் புணர்ச்சி
- சொற்புணர்ச்சியில் நிலை மொழியின் இறுதியில் உள்ள எழுத்து மற்றும் வருமொழியின் முதலில் உள்ள எழுத்து ஆகிய இரு எழுத்துக்கள் சந்திக்கும் முறையினை நான்கு வகையாக பிரிக்கலாம்.
உயிர் + உயிர்
- மொழி + ஆளுமை என்ற சொல்லில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் சந்திக்கும் முறை உயிர் + உயிர் ஆகும்.
மெய் + உயிர்
- கடல் + அலை மற்றும் தமிழ் + உணர்வு ஆகிய சொற்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் சந்திக்கும் முறை மெய் + உயிர் ஆகும்.
- தேன் + மழை ஆனது மெய் + மெய் முறைக்கும், தென்னை + மரம் ஆனது உயிர் + மெய் முறைக்கும் சான்று ஆகும்.
Similar questions