அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answers
பகுபதம் உறுப்பிலக்கணம்
- சொல், மொழி, பதம் என அனைத்தும் ஒரே பொருளை தரக்கூடியது.
- பதம் ஆனது பகுப்பதம், பகாப்பதம் என இரு வகைப்படும்.
- ஒரு சொல்லை மேலும் பிரிக்க முடியுமானால் அது பகுப்பதம் ஆகும்.
- பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை மற்றும் விகாரம் ஆகிய ஆறும் பகுப்பத உறுப்புகள் ஆகும்.
- ஒவ்வொரு சொல்லும் கட்டாயமாக பகுதி, விகுதி என்ற இரு உறுப்புகளை பெற்றிருக்கும்.
அலர்ந்து
- அலர்ந்து என்ற சொல்லை பிரிக்கும் போது அலர் + த்(ந்) + த் + உ என வரும்.
- இதில் அலர் என்பது பகுதி ஆகும்.
- த் என்பது சந்தியையும், ந் ஆனது விகாரத்தினையும் குறிக்கும்.
- இறந்த கால இடைநிலையை குறிப்பதாக த் என்ற சொல் வந்து உள்ளது.
- உ என்பது வினையெச்ச விகுதி ஆகும்.
Answer:
சிலப்பதிகாரம், புகார் காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
இது முத்தமிழ்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறுகிறது.
சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது
மணிமேகலை காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.
சேர மரபினைச் சேர்நதவர்.
மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
கோவலன் கண்ணகி கதையைக் கூறி, “அடிகள் நீரே அருளுக” என்றதால் இளங்கோவடிகளம் “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என இக்காப்பியம் படைத்தார் என்பர்.