ய், வ், ஞ், ட், ற், ந் - மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்ம்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answers
ய், வ், ஞ், ட், ற், ந் - மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்ம்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள்
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
- ஒரு சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- ய் - வாய்மை
- வ் - பவ்யம்
- ஞ் - இஞ்சி
- ட் - காட்சி
- ற் - பயிற்சி
- ந் - பந்து
உடனிலை மெய்ம்மயக்கம்
- ஒரு சொல்லின் இடையில் ஒரே மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- ய் - கொய்யா
- வ் - செவ்வாழை
- ஞ் - விஞ்ஞானி
- ட் - லட்டு
- ற் - காற்று
- ந் - செந்நாய்
Answer:
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய் எழுத்துகள்
ங், ஞ், ட், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
என்பன ஆகும்.
• ங் என்னும் மெய்எழுத்து
‘ங்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின், ‘க்’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.
எடுத்துக்காட்டு:
தங்கம்
வங்காளம்
அங்கி (நெருப்பு, சட்டை)
அங்கு
அங்கூடம் (அழகிய கூடம்)
அங்கே
அங்கை (உள்ளங்கை)
எங்கோமான்
• ஞ் என்னும் மெய் எழுத்து
‘ஞ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கஞ்சம் (தாமரை)
அஞ்சாமை
அஞ்சி
அஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்)
கஞ்சுகம் (சட்டை)
உரிஞ்(தேய்) யாது
• ட் என்னும் மெய் எழுத்து
‘ட்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்
எடுத்துக்காட்டு:
வெட்கம்
வெட்சி (ஒரு பூ)
மாட்சி (பெருமை)
நட்பு
நுட்பம்
• ண் என்னும் மெய் எழுத்து
‘ண்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.
எடுத்துக்காட்டு:
வெண்கலம்
கண்காட்சி
}
க்
வெண்சோறு
மண்சேறு
}
ச்
வெண்ஞமலி
உண்ஞமலி (உண்கின்ற நாய்) } ஞ்
மண்டலம்
வண்டல்
}
ட்
நண்பகல்
நண்பன்
}
ப்
வெண்மலர்
உண்மை
}
ம்
மண்யாது - ய்
மண்வலிது - வ்
• ந் என்னும் மெய் எழுத்து
‘ந்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
வந்த
வந்தான் } த்
வெரிந்யாது
-
ய்
• ம் என்னும் மெய்எழுத்து
‘ம்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கம்பன்
அம்பு
}
ப்
கலம்யாது
புலம்யாது
}
ய்
கலம்வலிது
வலம்வரும்
}
வ்
• ய் என்னும் மெய் எழுத்து
‘ய்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
பொய்கை (நீர்நிலை)
மொய்குழல்(அடர்ந்த கூந்தல்)
}
க்
வேய்சிறிது
காய்சினம்
}
ச்
வேய்ஞான்ற
(மூங்கில் முதிர்ந்தது) - ஞ்
நெய்தல்
நொய்து (மெல்லியது)
}
த்
மெய்நீண்டது - ந்
மெய்பெரிது - ப்
பேய்மனம் - ம்
பேய்வலிது - வ்
• ர் என்னும் மெய் எழுத்து
‘ர்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
வேர்கள் - க்
வேர்சிறியது - ச்
வேர்ஞான்றது - ஞ்
தேர்தல் - த்
நீர்நிலம் - ந்
மார்பு - ப்
கூர்மை - ம்
வியர்வை - வ்
• ல் என்னும் மெய் எழுத்து
‘ல்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கால்கோள் (தொடக்கம்) - க்
வல்சி (உணவு) - ச்
கல்பாக்கம் - ப்
நல்யாறு - ய்
பல்வலி - வ்
• வ் என்னும் மெய் எழுத்து
‘வ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.
எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் - பகை)
• ழ் என்னும் மெய் எழுத்து
‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
ழூழ்கினான் - க்
பாழ்செய் (பாழ்படுத்து) - ச்
வீழ்ஞான்ற (தொங்கிய விழுது) - ஞ்
ஆழ்தல் - த்
வாழ்நாள் - ந்
வாழ்பவன் - ப்
வாழ்மனை - ம்
வாழ்வு - வ்
• ள் என்னும் மெய் எழுத்து
‘ள்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கொள்கலம் - க்
வாள்சிறிது - ச்
வாள் பெரிது - ப்
வாள்யாது - ய்
கள்வன் - வ்
• ற் என்னும் மெய்எழுத்து
‘ற்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கற்க - க்
கற்சிலை - ச்
கற்பவை - ப்
• ன் என்னும் மெய் எழுத்து
‘ன்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
பொன்கலம் - க்
புன்செய் - ச்
புன்ஞமலி - ஞ்
புன்பயிர் - ப்
நன்மை - ம்
பொன்யாது - ய்
பொன்வலிது - வ்
தென்றல் - ற்